சுசித்ரா சர்ச்சை ஒரு பக்கம், விஜயுடனான சர்ச்சை ஒரு பக்கம் -த்ரிஷா போட்ட சூசக பதிவு

By Rajkumar · 4/7/2024

நடிகர் த்ரிஷா, பாடகி சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்திருக்கும் பதிலடி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்கள் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். அதன்பின் இவர் கதாநாயகியாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்திருக்கிறார்.

அதோடு இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் சமீப காலமாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பு த்ரிஷா விஜயுடன் இணைந்து நிறைய படங்கள் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயுடன் நடித்த படங்கள் :

அந்த வகையில் ஆதி, திருப்பாச்சி, கில்லி, குருவி போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். அதன் பின் 14 வருட இடைவெளிக்கு பிறகு த்ரிஷா, விஜயுடன் இணைந்து நடித்த படம் 'லியோ' என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்- த்ரிஷா ஜோடிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் தான் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள விஜயின் ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினர்.

https://www.youtube.com/watch?v=jNWOKw9_IFA&t=203s

த்ரிஷா வாழ்த்து:

அப்போது நடிகை த்ரிஷா, தனது எக்ஸ் தளத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், "அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்குப் பின் அமைதியாகவும்…. இதைத்தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், த்ரிஷா விஜய் உடன் ஃலிப்ட் ஒன்றில் பயணிக்கும் போது எடுத்தக் கொண்ட செல்பி புகைப்படத்தையும் ஷேர் செய்திருந்தார். இந்தப் பதிவு திடீரென ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பியது.

சுசித்ரா கூறியது:

அந்த வகையில் பாடகி சுசித்ரா தனது யூடியூப் சேனலில், நடிகை த்ரிஷா ஒரு ஒட்டுண்ணி. அரசியலில் இறங்கி இருக்கும் விஜய் அதில் ஜொலிக்க வேண்டுமென்றால் அவர் முதலில் தன் குடும்பத்துடன் இணைய வேண்டும். அப்பா அம்மாவுடன் சேர வேண்டும். முக்கியமாக அவரது மனைவி சங்கீதாவுடன் இணைய வேண்டும். எம்ஜிஆர் இடமிருந்து ஜெயலலிதா எப்படி கட்சியை பிடுங்கினாரோ, அதேபோல் த்ரிஷா விஜய்க்கு செய்வார்' என்று சர்ச்சை கிளப்பும் வகையில் பேசியிருந்தார்.

த்ரிஷா பதிலடி:

இந்நிலையில் நடிகர் த்ரிஷா தனது எக்ஸ்பிரஸ் பக்கத்தில் தற்போது பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 'நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால் உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள்' என குறிப்பிட்டுள்ளார். சுசித்ராவின் சர்ச்சையான பேச்சுக்கு, திரிஷாவின் இந்த பதிவு பதிலடியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது த்ரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம் என வரிசையாக படங்களில் கமிட்டாகி பிசியான நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Tamil Behind Talkies AMP · Quick view
View full