அஜித்தின் 'விடாமுயற்சி' இந்த படத்தின் கதை தான்? பிக் பாஸ் பிரபலம் பகிர்ந்த தகவல்

By subhashini · 5/2/2025

விடாமுயற்சி படம் குறித்து பிக் பாஸ் பிரபலம் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் சிங்களான ‘சவதீகா’ பாடல் படத்தின் பயங்கர ட்ரெண்டிங் ஆனது.

விடாமுயற்சி படம்:

அறிவு எழுதி இருக்கும் இப்பாடலை பாடகர் ஆண்டனிதாசன் பாடியிருந்தார். இந்தப் பாடல் வெளிநாட்டுகளில் படமாக்கப்பட்டதாகும். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது. தற்போது விடாமுயற்சி வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே விடாமுயற்சி படம் குறித்த அப்டேட் தான் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அஜித் கார் ரேஸ்:

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் நடிகர் அஜித் அவர்கள் துபாயில் 24 ஹவர்ஸ் கார் ரேஸ் நடந்திருந்தது. இதில் அஜித் தன்னுடைய குழுவுடன் கலந்து கொண்டிருந்தார். அஜித்தை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் இந்தியாவில் இருந்து துபாய்க்கு சென்று இருந்தார்கள். மேலும், இந்த ரேசில் அஜித் அவர்கள் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். இதை தொடர்ந்து அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருந்தது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அபிஷேக் சொன்னது:

தற்போது விடாமுயற்சி படத்தினுடைய பிரீ புக்கிங் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அளவில் சில மணி நேரங்களிலேயே இந்த படம் 15 கோடிக்கு மேல் ப்ரீ புக்கிங் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடாமுயற்சி படம் குறித்து பிக் பாஸ் பிரபலம், திரைப்பட ஆர்வலருமான அபிஷேக் ராஜா கூறியிருப்பது, விடாமுயற்சி படம் பிரேக் டவுன் படத்தினுடைய ரீமேக் என்று சொல்லப்பட்டாலுமே இங்கு உள்ள ரசிகர்களுக்கு ஏற்ப, அஜித்துக்கு ஏற்ப மாதிரி சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.

படம் குறித்து சொன்னது:

குறிப்பாக கிளைமாக்ஸில் திரிஷா கூட நெகட்டிவ் ரோட்டில் நடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது. தன்னுடைய கணவரை பழி வாங்குவதற்காக இவரே காணாமல் போய் நாடகம் ஆடுவது போல் கதையில் இயக்குனர் மாற்றம் செய்திருக்கலாம் என்றெல்லாம் கூறியிருக்கிறார். இப்படி இவர் சொல்லியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் விடாமுயற்சி படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full