என் மனதுக்கு ஒரு மறதி தேவை - திரிஷா எடுத்த திடீர் முடிவு. அப்சட்டில் ரசிகர்கள்.
தென்னிந்திய சினிமா உலகில் கடந்த 17 வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் திரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டு இருப்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. ஊரடங்கின் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதனால் பிரபலங்கள் எல்லோரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
https://twitter.com/trishtrashers/status/1271798040995627013
அந்த வகையில் நடிகை திரிஷா அவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டிக்டாக் வீடியோ பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார். இந்நிலையில் நடிகை திரிஷாவின் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நடிகை திரிஷா அவர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது, எனக்கு இது சந்தோஷம் தான். ஆனால், இந்த நேரத்தில் என் மனதுக்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும்.
https://www.youtube.com/watch?v=-vIPfxSI6mc
உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை த்ரிஷாவின் இந்த டீவ்ட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடிகை திரிஷாவின் கைவசம் நான்கு படங்கள் உள்ளது. லாக் டவுன் முடிந்தவுடன் திரிஷாவின் படங்கள் எல்லாம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.