சினிமா இருக்கும் காதல் - முதுகில் இப்படி ஒரு புதிய டாட்டூவை போட்டுள்ள திரிஷா. என்ன தெரியுமா ?

By Rajkumar · 20/4/2023

காதலை வெளிப்படுத்தும் வகையில் திரிஷா போட்டு இருக்கும் டாட்டூ குறித்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் சமீப காலமாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு திரிஷா அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியிருந்த பொன்னியின் செல்வன் 1 படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திரிஷா திரைப்பயணம்:

இந்த படத்தின் மூலம் திரிஷாவிற்கு இன்னும் ரசிகர் கூட்டம் உருவானது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகமும் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து சமீபத்தில் வெளியாகி இருந்த ராங்கி என்ற திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. தற்போது திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாக இருக்கிறது.

லியோ படம்:

இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இதனை அடுத்து தற்போது திரிஷா அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆதி, திருப்பாச்சி,கில்லி, குருவி போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்து இருந்தார்கள். அதன் பின் 14 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா, விஜய் உடன் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

திரிஷா டாட்டூ:

இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் தி ரோடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் திரிஷா. இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக திரிஷா வலம் வந்து கொண்டிருந்தாலும் இவர் டாட்டூவின் மீது அதிக பிரியம் கொண்டவர். தனக்கு பிடித்தவற்றை டாட்டூவாக போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் திரிஷா. அந்த வகையில் இவர் நெஞ்சில் நெமோ என்ற மீனை டாட்டூவாக போட்டிருக்கிறார்.

திரிஷா போட்ட காதல் டாட்டூ:

கையில் தனது ராசியின் சின்னத்தை டாட்டூவாக போட்டு இருக்கிறார். இது பலரும் அறிந்ததே. இந்த நிலையில் பலரும் அறியாத திரிஷாவின் டாட்டூ குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, திரிஷா சினிமாவின் மீது உள்ள தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் வகையில் தன்னுடைய முதுகில் சினிமா கேமரா மற்றும் கிளாப் போர்டு இருக்கும் டாட்டூவை இருக்கிறார். இதை 2016 ஆம் ஆண்டு போட்டு விட்டார். ஆனால், பெரிய அளவில் தெரியவில்லை. தற்போது பொன்னியின் செல்வன் பட ப்ரோமோஷன் போது எடுத்த புகைப்படத்தில் தான் திரிஷாவின் உடைய இந்த டாட்டூ வெளியாகி இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full