தமிழ் திரையுலகில் ‘ஜோடி’ என்ற படத்தில் மிகச் சிறிய வேடத்தில் நடித்தவர் நடிகை த்ரிஷா. இதனைத் தொடர்ந்து ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தில் நடித்தார் த்ரிஷா. இது தான் நடிகை த்ரிஷா ஹீரோயினாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். ‘மௌனம் பேசியதே’ படத்துக்கு பிறகு ‘மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி’ போன்ற சில படங்களில் நடித்தார் த்ரிஷா.

அதன் பிறகு தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை த்ரிஷா, அடுத்ததாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்தார். இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா. மேலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

Advertisement

தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் த்ரிஷா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா நடித்து 2018-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ’96’. இந்த படத்தினை பிரேம் குமார் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

Advertisement

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மெகா ஹிட்டானது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், நடிகை த்ரிஷா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் ரசிகர் ஒருவருடன் சேர்ந்து த்ரிஷா டிக் டாக் செய்யும் வீடியோ ஓடிக் கொண்டிருக்க, அதில் “96 படத்தின் சீக்குவலுக்கான கதை. ஜானுவின் கணவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்தில் இறந்து விட்டார். அதன் பின், ஜானு ஜூம் ஆப் மூலம் வீடியோ காலில் ராமிடம் பேசி இருவரும் சேர்ந்து விட்டனர்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement