சொந்த கிரிப்டோகரன்சி உருவாக்கி உள்ளேன் - நடிகை த்ரிஷாவின் பதிவால் அதிர்ந்து போன ரசிகர்கள், முழு விவரம் இதோ

By subhashini · 12/2/2025

நடிகை திரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா‌. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்திருக்கிறார்.

அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், 40 வயதை கடந்தும் இவர் தமிழ் திரையுலகில் சிங்கிளாக வலம் வரும் கதாநாயகிகளில் இவரும் ஒருவர். சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக வலம் வரும் இவர் இன்றும் புதுமுக நாயகிகளுக்கு போட்டியாக விளங்குகிறார்.

திரிஷா திரைப்பயணம்:

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகியிருந்த லியோ படத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. இதனை அடுத்து விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருந்த கோட் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் திரிஷா குத்தாட்டம் போட்டிருந்தார். இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க திரிஷா, எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

திரிஷா ஐடி ஹேக்:

இவர் சோசியல் மீடியாவில் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவரை ட்விட்டரில் 60 லட்சத்திற்கு அதிகமானவர்கள் பாலோ செய்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் திரிஷாவின் ட்விட்டர் கணக்கு செய்யப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரிஷாவின் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கில், கிரிப்டோகரன்சி தொடர்பான பதிவும் வெளியாகியிருக்கிறது.

விளக்கம் கொடுத்த திரிஷா:

அந்த பதிவில், முதல் முறையாக இது போன்ற ஒன்றை செய்வதில் தான் சந்தோஷப்படுகிறேன். நான் என்னுடைய சொந்த கிரிப்டோகரன்சி உருவாக்கியிருக்கிறேன். இப்போது அது செயல்பாட்டுக்கும் வந்திருக்கிறது. லவ் யூ ஆல் என்று பதிவிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த பதிவில் ஒரு லிங்க் இணைக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து மற்றொரு பதிவும் போடப்பட்டு டெலீட் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இந்த பதிவுகள் குறித்து இன்ஸ்டாகிராமில் திரிஷா விளக்கம் ஒன்று அளித்திருக்கிறார்.

விடாமுயற்சி படம்:

அதில் அவர், என்னுடைய twitter ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அதை நான் மீட்கும் வரை அதில் பதிவிடப்படும் எதுவும் நான் போட்டது கிடையாது. நன்றி என்று கூறியிருக்கிறார். தற்போது திரிஷாவின் இந்த பதிவுதான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடைசியாக திரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விடாமுயற்சி. அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அதை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி என்ற படத்திலும் திரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full