லியோ படம் குறித்த பதிவுகளை நீக்கினாரா திரிஷா, படத்தில் இருந்து விலகலா ? திரிஷாவின் அம்மா விளக்கம்.

By Manikandan · 8/2/2023

தளபதி 67 படத்திற்க்காக காஷ்மீர் சென்ற திரிஷா 3 நாட்களில் வந்திருப்பது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

காஷ்மீரில் ஷட்டிங் :

இப்படி நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர். இவர்கள் காஷ்மீர் செல்கையில் படக்குழுவின் பல புகைப்படங்களும், விடீயோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும் பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வந்தனர்.

முதல் ப்ரோமோ :

இப்படிப்பட்ட நிலையில் தான் படத்தில் முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. அந்த ப்ரோமோவில் காலை காட்சியில் சாக்கலேட் தயாரிக்கும் விஜய் இரவு நேரத்தில் வாழ் ஒன்றை தயாரிக்கிறார். பின்னர் அங்கு பல கார்கள் வருகின்றனர். விஜய் வாழில் உள்ள சாக்கலேட்டை சாப்பிடும் படி அந்த ப்ரோமோ முடிந்தது. மேலும், இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். படம் வரும் ஆக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

காஸ்மீரில் இருந்து திரும்பி வந்த திரிஷா

இந்நிலையில் விஜய்யுடன் பல வருடங்கள் கழித்து நடிகை திரிஷா இணைந்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் படக்குழுவுடன் காஷ்மீர் சென்ற திரிஷா மூன்றே நாட்களில் அங்கிருந்து சென்னை வந்துவிட்டார். இவர் சென்னை வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் ஏதோ நடந்திருக்கிறது, அதனால் தான் திரிஷா இவ்வளவு விரைவாக சென்னை வந்திருக்கிறார் என்று கூறிவந்தனர்.

வதந்திகள் :

திரிஷா இப்படி விரைவாக சென்னை வந்தது வைரலாகவே பலரும் லோகேஷ் கனகராஜுக்கும் திரிஷாவுக்கும் ஏற்பட்ட வாக்கு வாத்தின் காரணமாகத்தான் சன்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டார் என்றும். சிலர் திரிஷாவுக்கு குளிர் ஆகாது எனனே தான் வந்துவிட்டார் என்றும் வாய்க்கு வந்ததை கூறினார்கள். அதே போல தளபதி 67 சம்மந்தமான சில புகைப்படங்களை கூட திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் நீக்கி இருந்தது. இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.

இன்னும் சில ஒரு படி மேலே சென்று இந்த படத்தில் உண்மையான கதாநாயகி பிரியா ஆனந்த் தான் என்றும், படத்தில் திரிஷா முதல் 2 நிமிடங்கள் தான் வருவார் எனவே மிஷ்கின் தான் திரிஷ்வின் கழுத்தை அறுத்து கொன்று விட்டார் எனவும், கேங்ஸ்டராக இருக்கும் கெளதம் மேனன் நடிகர் மன்சூர் அலிகானிடம் சொல்லி விக்ரம் படத்தில் வந்ததை போல தலையை வெட்டி கதையா முடித்து விட்டார் இதனால் தான் திரிஷா திரும்பி சென்னை வந்துள்ளார் எனவும் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வாதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :

இப்படி பட்ட நிலையில் தான் நடிகை திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் தன்னுடைய மக்கள் திரிஷா காஷ்மீரில் தான் இருக்கிறார் என்றும். தளபதி மற்றும் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன். இந்த தகவல் தளபதி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full