டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள் – இந்த வாரம் சன் டிவி, விஜய் டிவியை முந்திய ஜீ தமிழ் சீரியல்.
டிஆர்பி ரேட்டிங்கில் மே மாதத்தில் இரண்டாம் வாரத்தில் டாப் 10 ல் இருக்கும் சீரியல்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புது புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கும் மேலாக சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி சனிக்கிழமை தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
சீரியல் டிஆர்பி:
அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் 18வது வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த பட்டியல் இதோ,
சிங்க பெண்ணே சீரியல்:
சிங்க பெண்ணே சீரியல் தான் கடந்த சில மாதங்களாக முதல் இடத்தை பிடித்திருக்கிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு சென்று இருக்கிறார் ஆனந்தி. இவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சீரியல் பரபரப்பான கட்டங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியல் 9.44 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.
கயல்:
முதல் இடத்தில் இருந்த கயல் சீரியல் எதிர்பார்க்காத வகையில் சில வாரங்களாகவே இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்கள். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோசத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல். இந்த சீரியல் 9.29 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.
எதிர்நீச்சல்:
கடந்த வாரம் நான்காம் இடத்தை பிடித்த எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் 8.61 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இயக்குனர் திருச்செல்வம் தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். பெண்கள் உரிமைக்காக போராடும் இந்த தொடர் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் மத்தியில் அதிக அளவு ஆதரவு பெற்று வருகிறது. தற்போது சீரியலில் பெண்கள் எல்லோரும் தனியாக சொந்த காலில் சுயமாக சம்பாதித்து வாழ நினைக்கும் ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது.
வானத்தைப்போல:
வானத்தைப்போல சீரியல் 8.05 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அண்ணன்- தங்கை பாச கதை. இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். பொன்னி-துளசி இடையே ஏற்படும் சண்டை வைத்து தான் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.
சிறகடிக்க ஆசை:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் எதிர்பாராத வகையில் மூன்றாம் இடத்தில் இருந்து 7.44 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் இந்த சீரியல் தான் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். சீரியலில் முத்து-மீனா இருவரும் குடும்பத்துக்காக கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், அதை விஜயா புரிந்து கொள்ளாமல் அவர்களை திட்டுகிறார். தற்போது சீரியல் விறுவிறுப்பான கட்டங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.
சுந்தரி 2 சீரியல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நன்றாக செல்கிறது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சுந்தரி கலெக்டராக இருக்கிறார். மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். இந்த தொடர் 6.82 புள்ளிகளை பெற்று ஆறாம் இடத்தை பிடித்து இருக்கிறது.
மல்லி:
சன் டிவியில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் மல்லி. இந்த சீரியல் 6.36 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.
பாக்கியலட்சுமி :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் 6.27 புள்ளிகளுடன் எட்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 5.81 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது.
கார்த்திகை தீபம்:
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல் 5.47 புள்ளியுடன் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.