பைக்கில் தாறுமாறாக சென்ற TTF வாசன் பயத்தில் அலறிய மௌன ராகம் ரவீனா - வைரலாகும் வீடியோ.

By Manikandan · 8/2/2023

ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த டிடிஎஃப் வாசன் தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு அவருடைய புல்லட்டை ஓட்ட பழகிய அவர் நாளடைவில் புல்லட்டை மீது ஏற்பட்ட பிரியம் காரணமாக அதையே தனது வேலையாகவும் மாற்றினார். பைக்கில் இந்தியா முழுவதும் பயணிக்கும் அவர் அதனை எல்லாம் வீடியோவாக எடுத்து தனது youtube சேனலில் பதிவேற்றி வந்தார். ஆரம்பத்தில் பெருமளவு பார்வையாளர்கள் அவருக்கு வரவில்லை என்றாலும் நாளடைவில் அவருக்கு சிறுவர்கள் இடையே ஆதரவு பெறுகியது.

அதன் காரணமாக அசுர வளர்ச்சி அடைந்த அவரது யூடியூப் சேனலில் தற்போது 27 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள். குறிப்பாக சிறுவயது வாலிபர்கள் அவர் வேகமாக பைக் ஓட்டுவதையும், பைக் ஸ்டண்ட் செய்வதையும் பார்த்து பிடித்து போக அவர்களுக்கு பைக் மீதுள்ள மோகம் காரணமாக அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த மேகமே இவரை போன்ற இளைஞர்கள் மத்தியில் தவறாக மாறக்கூடும் என்று பல கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவும் எதிர்ப்பும் :

மேலும் TTF வாசன் ஆபத்தான முறையில் பைக்குகளை ஓட்டி சோசியல் மீடியாவில் பதிவிடுவதினால் இதனை பார்க்கும் ரசிகர்களும் அவரை போன்றே செய்ய வேண்டும் என்று ஆபத்தில் தங்களையும் அவர்களை சுற்றியுள்ள மக்களையும் சிக்க வைக்கின்றனர் என்று பெரும் குற்றசாட்டு TTF வாசன் மீது வைக்கப்படுகிறது. ஆனாலும் சில அவர் யூடியூபில் வீடியோ போட்டால் உங்களுக்கு என்ன. உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர்.

அச்சுறுத்தும் வகையில் பைக் ரைடு :

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலூரில் ஒரு அலுவலகம் திறப்பதற்கு சென்றிருந்தார். அங்கு பலரும் அவரை காண பல ரசிகர்களை வந்திருந்தனர். டிடிஎஃப் வாசனை சந்திக்க வந்த ரசிகர்கள் பைக்கில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பிக்கொண்டும் வந்த இளைனர்களை பிடித்து அடிக்க தொடங்கினர். ஆனால் கூட்டம் அதிகமாகிக்கொண்டே சென்றதால் காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனாலும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே ஊர்வலம் சென்றது.

தொடர் சர்ச்சை :

இப்படிப்பட்ட நிலையில் TTF வாசன் ரசிகர்கள் "அண்ணா மேம்பாலம்" அருகே சென்றதும் அங்கே இருந்த மக்களின் மீது பைக்குகளை மோதி விபத்து ஏற்படுத்தியத்தினால் கடும் கோவமடைந்த காவல் துறை 200 மேற்பட்ட பைக்குகளை மடக்கி வெளுத்து வாங்கினர். இந்த நிகழ்வினால் TTF வாசனை கைது செய்ய வேண்டும் என்று சர்ச்சை கிளம்பிய நிலையில் வாகன என் இல்லாமல் கார் ஓடியதற்காக TTF வாசன் கார் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

https://www.youtube.com/watch?v=aJC_2CfDVBk&t=433s

பைக் ரைடு சென்ற மௌனராகம் சீரியல் சக்தி :

இப்படி தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் TTF வாசன் தற்போது வீடியோ ஒன்றை தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதாவது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சிரியலான மௌனராகம் 2ல் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவீனா சமீபத்தில் TTF வாசனை சந்தித்துள்ளார். இந்நிலையில் TTF வாசன் ரவீனாவை பைக்ரைடிற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்படி செல்லும் போது வேகமாக சென்றதினால் ரவீனா பயந்து அலறியுள்ளார். இந்த விடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ள TTF வாசன் மீது நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full