எத்தனை நண்பன் துரோகி ஆனாலும், எத்தனை துரோகி எதிரானாலும் நான் தாங்குவேண்டா- டிடிஎப் வாசன் கொடுத்த பதிலடி

By subhashini · 15/10/2024

மஞ்சள் வீரன் பட இயக்குனரை தாக்கி டிடிஎப் வாசன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே மஞ்சள் வீரன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளத்தின் மூலம் வைரலாகி தற்போது பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும்போது ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு உதவிகள் செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.

https://www.youtube.com/watch?v=48MgxDz6QUI&t=45s

இதனால் இவர் சீக்கிரமாகவே 2K கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார். இருந்தாலும், இவர் வண்டியில் அதிவேகமாகச் சென்று பிறரை பயமுறுத்துவதும், சாலை விதிகளை மீறுதல் என்று பல வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் இவரிடமிருந்து லைசன்ஸ் பறிக்கப்பட்டது. சமீபத்தில் டிடிஎஃப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் செல்அம் இயக்குவதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. அதற்குப் பிறகு இந்த படத்தை குறித்து எந்த ஒரு தகவலுமே வெளியாகவில்லை.

டிடிஎஃப் வாசன் நீக்கம்:

மேலும், சமீபத்தில் மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர், இந்தப் படத்தில் கதாநாயகனாக டிடிஎப் வாசன் நடித்தார். தற்போது அவரை இந்த படத்தில் இருந்து நீக்கி விட்டோம். வேறு ஒரு நடிகர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அது தொடர்பான தகவலையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வருகின்ற அக்டோப 15ஆம் தேதி வெளியிட இருக்கிறோம். அவரை நீக்குவதற்கு காரணம், சூழ்நிலை ஒத்துவரவில்லை. அவருக்கு இதைவிட நிறைய வேலை இருக்கிறது என்றெல்லாம் டிடிஎஃப் வாசன் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=VTkthc2X6Lk

டிடிஎஃப் வாசன் வீடியோ:

இப்படி இயக்குனர் செல்அம் சொன்னது இணையத்தில் சர்ச்சைகளை எழுப்பி இருந்தது. பின் இது தொடர்பாக மனவேதனையில் டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், என்னிடம் சொல்லாமலே என்னை மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். என்னிடம் சொல்லியிருந்தால் நானே விலகி இருப்பேன். இதுவரை இந்த படத்திற்காக ஒரு பூஜை, ஒரு போட்டோ சூட் மட்டும் தான் எடுத்திருக்கிறார்கள். பூஜைக்கு கூட பணம் இல்லை என்று நான் தான் கொடுத்தேன். எனக்கு துரோகம் செய்பவர்கள் முன்பு நான் வாழ்ந்து வெற்றி அடைவது தான் அவர்களுக்கு நான் கொடுக்கும் பதிலடி. நான் மனமுடைய மாட்டேன், தளர மாட்டேன் என்று கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=yrSQIWh_2pg

இயக்குனர் செல்அம் பேட்டி:

அதை அடுத்து இயக்குனர் செல்அம் பேட்டியில், படத்திலிருந்து சொல்லிட்டு நீக்கிற அளவுக்கு டிடிஎஃப் வாசன் செயலில் ஒண்ணும் பெருசா பண்ணவில்லை. முதலில் அந்த தம்பி எனக்கு தங்கமா தெரிஞ்சாரு. இப்ப சொல்லாமல் நீக்கிற அளவுக்கு ஒரு குப்பை மாதிரி ஆயிட்டாரு. நான் எவ்வளவு பெருந்தன்மையாக தம்பியை ஒரு சில சூழ்நிலை காரணமாக நீக்குகிறேன் என்று சொல்லி விட்டுவிட்டேன். என்னால் அப்பாவே எல்லாத்தையும் சொல்லி இருக்க முடியும். ஆனால், நான் சொல்லவில்லை. ஆனால், அந்த தம்பி என்னை வைத்து வீடியோ ஒன்று போட்டு மூன்று லட்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான். இன்னைக்கும் அவன் என் உழைப்பை சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறான்.

View this post on Instagram

A post shared by Vaikuntha vasan (@vasan__enfielder)

டிடிஎப் வாசன் பதிவு:

படத்துக்கு பூஜை போட்டு ஒரு வருஷம் பக்கத்துல தான் ஆகுது. ஆனால் மூணு வருஷமா படம் எடுக்கல என்று பொய் சொல்றாரு. மக்களை நல்லா அழுது பொய் பேசி ஏமாற்றுகிறான் என்று ஆதங்கத்தோடு பேசி இருந்தார். இதை எடுத்து மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகனாக கூல் சுரேஷ் கமிட்டாகி இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிடிஎப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், இயக்குனர் செல் அம் சந்தோஷமாக ஆடும் வீடியோவையும், தன்னுடைய வீடியோவையும் பதிவிட்டு, எத்தனை நண்பன் துரோகி ஆனாலும், எத்தனை துரோகி எதிரானாலும் நான் தாங்குவேண்டா. நீ நல்லா இரு என்ற மாரி படத்தின் வசனத்தை இணைத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full