டிடிஎஃப் வாசன் மதுரையில் அவரை எதற்கு சந்தித்தார் எதார்த்தமாக? இல்லை ஆதரவுக்காகவா? பரப்பரப்பு செய்தி இதோ

By subhashini · 2/6/2024

மதுரை முன்னாள் ரவுடியை டிடிஎஃப் வாசன் சந்தித்து பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் வழியில் வேகமாக பணம் மற்றும் சாப்பாடு போன்ற உதவி செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதனால் இவர் சீக்கிரமாகவே 2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார்.

தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்களில் டிடிஎஃப் வாசனும் ஒருவர். இப்படி இவர் பிரபலமாக இருந்தாலும் வண்டியில் அதி வேகமாக சென்று பிறரை பயமுறுத்துவது, சாலை விதிகளை மீறி கூட்டத்திற்குள் செல்வது என்று பல வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இவர் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக மட்டுமில்லாமல் இப்படி இவர் செய்வதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதையில் செல்வார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றார்கள்.

டிடிஎஃப் வாசன் குறித்த தகவல்:

இப்படி இவர் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் இருந்தாலும் தற்போது இவர் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தை செல் அம் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் கூல் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பின் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றது.

https://www.youtube.com/watch?v=sjsCaJHQBPg

டிடிஎஃப் வாசனுக்கு ஏற்பட்ட விபத்து: இப்படி இருக்கும் நிலையில் தான் கடந்த ஆண்டு சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் டிடிஎப் வாசன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் காரை முந்தி செல்ல முயன்ற போது தான் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இவருக்கு பயங்கரமாக அடிபட்டு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

நீதிமன்றம் உத்தரவு:

அதோடு போக்குவரத்து துறை டிடிஎப் வாசன் லைசென்ஸை 10 வருடத்திற்கு ரத்து செய்து இருந்தனர். மேலும், மருத்துவ சிகிச்சைக்கு பிறகு டிடிஎஃப் வாசன் ஜெயிலுக்கு சென்றார். பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செல்போன் பேசிக்கொண்டே கார் ஒட்டிய குற்றத்திற்காக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டு பின் மீண்டும் ஜாமினில் வெளியில் வந்தார். இப்படி ஒரு நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த சில தினங்களில் முன்னாள் ரவுடி வரிசூர் செல்வத்தை சந்தித்து பேசி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=QlvXbmZknRA

டிடிஎஃப் வாசன் வீடியோ:

இது தொடர்பான வீடியோ தான் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், வரிசூர் செல்வத்தின் வீட்டில் டிடிஎஃப் வாசன் சோபாவில் அமர்ந்து அவர் கொடுத்த உணவை சாப்பிட்டு பேசி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை பற்றி உங்களுடைய அறிவுரை எனக்கு வேண்டும் கேட்டிருக்கிறார. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன், 2கே கிட்ஸ் வாசனுக்கு 70s கிட்ஸ் ஆன வரிசூர் செல்வம் ஆதரவு கொடுக்கிறாரா? அவரை எதார்த்தமாக சந்தித்தாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full