தமிழக முதல்வர் ஸ்டாலினும் எடப்பாடி பழனிச்சாமியும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் ஹிட்லரின் இரண்டு சகோதர்கள் போல் இருக்கின்றனர். தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்கள் சந்தித்தார். அதில் அதிமுகவின் மாநாடு பற்றியும் எடப்பாடி பழனிச்சாமி பற்றியும் விமர்சித்தார். மேலும் அவர் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

தினகரன் கூறியது:

“அது eps எழுச்சி மாநாடு வீழ்ச்சி மாநாடு. முன்னாள் அமைச்சர்கள் என்ன சொன்னார்கள் 15 முதல் 25 லட்சம் பெற அழைத்து வருகிறோம் என்று கூறினார்கள். அவர்களிடம் இருப்பவர்களை என்னிடம் வருத்தப்பட்டு சொன்ன தகவல் என்னவென்றால். இவ்வளவு செலவு செய்து வண்டி வாகனங்கள் தயார் செய்து வாகனங்களில் ஏறுவதற்கு ஆள் இல்லை என்றனர். ஒரு ஒருவனுக்கு ஐந்து ஆறு பேர் தான் இருக்கிறார்கள்.  அதிகபட்சமாக அந்த மாநாட்டில் இரண்டு முதல் இரண்டரை லட்சம் நபர்கள் மட்டுமே பங்கு பெற்றுள்ளனர்.

Advertisement

அதில் ஒரு சைபரை கூட்டி சேர்த்து சொல்கிறார்கள். அவரை புரட்சி தமிழன் என்று அழைத்தால் புரட்சி என்கிற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போகிவிடும். அவருக்கு துரோக தமிழர் என்றும் துரோகத்திற்கு எடுத்துகாட்டு என்று அழைக்கலாம். அவர் என்ன புரட்சி செய்தார் காலில் வீழ்ந்து பதவி வாங்கிகொண்டு அவர்களுக்கு துரோகம் பண்ணுவது தன் ஆட்சியை நீடிக்க காரணமாக இருந்த பன்னீர் செல்வத்திற்கு துரோகம் செய்வது தவறாக ஈட்டிய பணப் பலத்தாலும் கட்சியை கபளீகரம் செய்வது தான் சாதனை என்றால் அது தான் புரட்சி செய்தார் என்றால் அது வெக்க கேடான விஷயம்.”

நீட் குறித்த கேள்விக்கு பதிலளித்த தினகரன் “ ஸ்டாலின் செய்வதெல்லாம் நகைச்சுவையாக இருக்கிறது. தேர்தலுக்கு முன் அவர் பேசியது என்ன பழனிச்சாமி ஆட்சி என்பது எதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார் அதெல்லாம் தற்போது அவர் ஹிட்லர் போல் அதையெல்லாம் நிறைவேற்றி வருகிறார். அவன் அளித்த வாக்குறுதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மக்கள் அவர்களுக்கு ஆட்சி பொறுப்பு எடுத்தது தவறு என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டு வருகிறார். பழனிச்சாமிக்கு முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது அவர்கள் இருவரும் ஹிட்லரின் இரண்டு சுதந்திரர்களை போல் செயல்பட்டு இருக்கின்றனர்.

Advertisement

இவர்களுக்கு மாற்றுக் கட்சியாக ஆமாம் ஆக கட்சி தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். மதுரை மண் நீதி வழங்கிய மண் அங்கு  துரோகிகள் போனால் அவர்களுக்கு  அநீதி இழைத்து விட்டது அது தான் உண்மை. ஆறு மாதங்களில் அவர்கள்  அடித்த தம்பட்டங்கள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.  பிஜேபியுடன் எனக்கு எந்த உறவும் கிடையாது அதில் சில நண்பர்கள் உள்ளனர். தனியாக  தேர்தலை சந்தித்தால் அது எங்கள் தலைமையில் தான் நடைபெறும்.

Advertisement

தேசிய கட்சியுடன் கூட்டணி இருந்தால் அவர்கள் தான் தலைமை வகிப்பார்கள். தற்போது அம்மாவும் இல்லை கலைஞரும் இல்லை அவர்கள் இல்லாத காலத்தில்  இங்கு ஒரு கூட்டணி அமைத்தால் அதில் தேசிய கட்சி தான் தலைமையில் இருக்கும். கூட்டணி இல்லை என்றாலும் நங்கள் தனித்து நிற்க தயாராக உள்ளோம்.         

Advertisement