நான் அஜித் ஃபேன் தான், விஜய் பத்தி பேசுவது அநாகரீகமானது - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன்
கடவுளே அஜித்தே கோஷம் தொடர்பாக டிடிவி தினகரன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷம் வைரலாகி வருகிறது. இந்த கோஷத்தால் வருத்தமடைந்து நடிகர் அஜித் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், சமீப காலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளிகளில், அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‛க….. அஜித்தே” என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை.
அஜித் அறிக்கை:
எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த நான் கோரிக்கைக்கு மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்து கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்! வாழு & வாழ விடு! என்று கூறி இருந்தார்.
From The Desk of AK pic.twitter.com/0W4dspCg26
— Suresh Chandra (@SureshChandraa) December 10, 2024
அறிக்கைக்கு காரணம்:
மேலும், அஜித் அறிக்கை வெளியிட்டதற்கு காரணம் டிடிவி தினகரன் என்று கூறப்படுகிறது. காரணம், கோவையில் நடந்த அரசு விழாவில் பெண்ணியத்திற்காக ஓடு என்ற தலைப்பில் மரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டிடிவி தினகரன் பரிசு கொடுத்து இருந்தார். அப்போது மாணவர்கள் சிலர், 'கடவுளே அஜித்தே' என்று கோஷம் போட்டு கத்தி இருந்தார்கள். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து சில நிமிடங்கள் பேச்சை நிறுத்தி இருந்தார். அதன் பின் நிர்வாகிகள் இடம் இதைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டாராம்.
டிடிவி தினகரன் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற டிடிவி தினகரன்,
மாணவர்களுக்கு பரிசளிக்கும் முன் மேடையில் பேச சொன்னார்கள். அப்போது கடவுளே அஜித்தே என்ற கோஷம் வந்தது. எனக்கு முதலில் புரியவில்லை. அதற்கு பின் உதவியாளரிடம் தெரிந்து கொண்டேன். அதற்குள் பத்திரிக்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி செய்தி வெளியிட்டார்கள். நான் அந்த கோஷத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.நான் அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை. நானும் அஜித் உடைய பேன் தான்.
https://www.youtube.com/watch?v=-Gtmnwg2SjE
அஜித் குறித்து சொன்னது:
அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை பல பேட்டிகளில் நானே சொல்லி இருக்கிறேன். பல குழந்தைகளுக்கு கூட நான் அஜித் பெயரை வைத்திருக்கிறேன். அதுக்காக எனக்கு விஜய் பிடிக்காது என்று கிடையாது. அவரையும் பிடிக்கும் அவர் படத்தையும் பார்ப்பேன். இவர்கள் மட்டும் இல்லாமல் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விக்ரம், சூர்யா என்று எல்லா நடிகர்களுடைய படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதேபோல் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது ஒன்றும் படம் கிடையாது. அவர் ஒரு கட்சி தொடங்கி கொள்கை, கோட்பாட்டை எல்லாம் சொல்லியிருக்கிறார். இதில் நாம் கருத்து தெரிவிக்க முடியாது. அப்படி கருத்து தெரிவிப்பது நாகரிகமாக இருக்காது என்று பேசி இருக்கிறார்.