படப்பிடிப்பின் இடைவெளியில் மேக்கப் ரூமில் தற்கொலை செய்துகொண்ட டிவி நடிகை - நடிகரிடம் விசாரணை.

By Manikandan · 25/12/2022

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்திருந்த பிரபலமான துனிஷா சர்மா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதாகிய துனிஷா சர்மா பல பாலிவுட் திரைப்படங்களில் அதிக குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் தற்போது அலிபாபா தாஸ்தென் இ காபுல் என்ற தொலைக்காட்சியில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் துனிஷா நேற்று மும்பை அருகே உள்ள வசாய் நைகாவ் படப்பிடிப்பு தளத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். காலையில் படப்பிடிப்பு முடிந்தவுடன் மத்திய இடைவெளி விடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் துனிஷா சர்மா அந்த நிகழ்ச்சியின் சக நடிகரான சகீன் மொகமத் மேக்கப் அறைக்குள் சென்றுள்ளார். உள்ளே சென்ற துனிஷா சர்மா நீண்ட நீரம் ஆகியும் அவர் வெளியில் வரவில்லை.

இந்த நிலையில் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அவர் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் உடன் இருந்தவர்கள் இவரை மருத்துவமனைக்கு கொண்டு செலவே மருத்துவர்கள் துனிஷா சர்மா ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் துனிஷா சர்மாவின் தாயார் கொடுத்திருந்த வழக்கின் பேரில் சக நடிகரான சகீன் மொகமத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடந்து வருகின்றனர்.

துனிஷா சர்மாவை சகீன் மொகமத் என்பவர் தற்கொலைக்கு தூண்டியதாக குடும்பத்தின் சார்பில் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் கூறிய போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து அனைவரையும் விசாரித்து வருகிறோம் என்று கூறியிருந்தனர். இது குறித்து அவரது தோழிகள் கூறுகையில் துனிஷா சர்மா ஷோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர், இவர் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தில் இருந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த முடிவை எடுப்பார் என்று நாங்கள் நினைத்து பார்க்க வில்லை என்று கூறியிருந்தனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full