அவன் பழசை மறந்துடுற ஒரு ஆள் - வி.ஜே.விஷால் குறித்து நடிகையின் அம்மா சொன்ன ஷாக்கிங் தகவல்

By subhashini · 29/11/2024

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் ஜெஃப்ரி-சௌந்தர்யா அட்ராசிட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி எட்டாவது வாரம் தொடங்கி 52 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது.

பிக் பாஸ் 8:

அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார்கள். அதில் வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆவார். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா,சுனிதா, ரியா தியாகராஜன், ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். அதன் பின் குறைவான வாக்குகளை பெற்று தான் வெளியேறி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அதன் பின் எட்டாவது வாரத்திற்கான நாமினேட் பட்டியலில் ஜாக்லின், ரஞ்சித், சிவா, சாச்சனா, அன்ஷிதா, ராயன், ஆனந்தி, மஞ்சரி,விஷால், சத்யா இடம் பிடித்து இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில தினங்களாகவே பிக் பாஸ் வீட்டுக்குள் லவ் ட்ராக் சென்று கொண்டிருக்கின்றது. தர்ஷிகா- விஷால் இடையே தான் காதல் டிராக் போகிறது. இது மற்ற போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, பவித்ரா இதைப் பற்றி பேசி கடுப்பில் புலம்பி இருந்ததெல்லாம் வைரலாகி இருந்தது.

சீரியல் நடிகை அம்மா பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக விஷாலுக்கு நெருக்கமானவர் கூறியது, விஷால் உடைய அப்பா பைனான்சியர். படித்து முடித்துவிட்டு மாடலிங் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த நேரத்தில் தான் சீரியலில் ஒரு சின்ன கேரட்டில் நடிக்க விஷாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரம்மா சார் தான் இயக்குனர். சீனியர் நடிகை ஒருவரிடம் இதைப் பற்றி சொன்னோம். அவங்க தான் ரெக்கமண்ட் பண்ணி விஷாலை நடிக்க வைத்தார்கள். இயக்குனர், இவர் செட் ஆகுவாரான்னு டவுட்டா இருக்கு என்று சொன்னார். ஆனால், நான் தான் வாய்ப்பு கொடுங்கள் என்று அவனுக்காக பேசினேன்.

விஷாலின் குணம்:

கடைசியில் அந்த சீரியலில் கமிட் ஆகிவிட்டார். அவனுடைய முதல் சீரியலில் என்னுடைய பொண்ணு தான் அவருக்கு ஜோடியாக நடித்தார். சீரியலில் கமிட்டானதுமே பீல்ட்டை தெளிவாக புரிந்து கொண்டார். அதனால் தான் டான்ஸ் ரியாலிட்டி, குக் வித் கோமாளி என்ற பல நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் வந்துவிட்டார். ஆனால், இதில் என்ன வேடிக்கை என்றால் எந்த பொண்ணு கூட முதன் முதலாக ஜோடியாக நடித்தானோ அதே பொண்ணு கூட வளர்ந்த பிறகு நடிக்க மறந்துவிட்டான். பழசை மறந்து விடுகிற ஒரு ஆள்தான் விஷால் என்று அந்த நடிகையினுடைய அம்மா கூறியிருக்கிறார். ஆனால், அந்த நடிகை யார் என்று குறிப்பிடவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full