காசு வாங்கிட்டு வேலை செய்றன்னு ஒருமையில் பேசுறாங்க - தேர்தல் அதிகாரி உமாசங்கர் ஆதங்கம்
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் அதிகாரி உமாசங்கர் எழுதி இருக்கும் கடிதம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடைபெறுவது வழக்கமான ஒன்று தான். இந்த சங்கத்தில் 2000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த ஆண்டு நடந்த தேர்தலில் சிவன் சீனிவாசன் அணி, பரத் தலைமையில் ஒரு அணி, தினேஷ் தலைமையில் அணி என மூன்று அணிகள் போட்டியிட்டு இருந்தார்கள். நடிகை ஆர்த்தி கணேஷ் மட்டும் சுயேச்சையாக தலைவர் பதவிக்கும் அவருடைய கணவர் கணேஷ் அவர்கள் சுயேச்சையாக துணை தலைவர் பதவிக்கும் போட்டியிட்டு இருந்தார்கள்.
இதில் தினேஷ் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை ரவீனா போட்டியிட மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தார். ஆனால், இவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. ஏற்கனவே நடிகை ரவீனா மனு நடிகர் சங்கத்திலிருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட செய்தி பரவி இருந்தது அனைவரும் அறிந்ததே. இதனால் ஓராண்டுக்கு சீரியலில் நடிக்க ரவீனாவிற்கு தடைபிடிக்கப்பட்டது. இந்த காரணத்தை சொல்லி தான் அவருடைய மனுவும் நிராகரிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னையில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றிருந்தது.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்:
இதில் பல சின்னத்திரை நடிகர், நடிகைகள் வாக்களித்து இருந்தார்கள். ஆனால், நடிகை ரவீனாவை மட்டும் ஓட்டு போட அனுமதிக்கவில்லை. இதனால் வேதனையில் ரவீனா பேட்டி அளித்து இருந்தார். பின் வாக்கு பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. தலைவர் பதிவுக்கான வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது. அதில் நடிகர் பரத் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை முன்னிலையில் வகுத்து வந்தார். இவர் 491 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றிருந்தார். அவரை அடுத்து சிவன் சீனிவாசன் 222 வாக்குகளும், தினேஷ் 175 வாக்குகளும், ஆர்த்தி 33 வாக்குகளும் பெற்றார்கள்.
https://www.youtube.com/watch?v=ALUy8eWpaRc
தேர்தல் வெற்றி:
இதுவரையில் சங்க நிர்வாகத்தில் இளம் வயதில் தலைவர் ஆனது பரத் தான். மேலும், பரத் தலைமையிலான அணி அபார வெற்றி பெற்றது. தலைவர், செயலாளர், பொருளாளர், துணை செயலாளர்கள், துணை தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என அனைத்து பேருமே வெற்றி அணியை சேர்ந்தவர்கள் தான். இதற்கு பலரும் வாழ்த்தி இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலினால் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பற்றி தேர்தலை நடத்திய பெப்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் உமாசங்கர் பாபு தலைவர் பரத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
உமாசங்கர் பாபு பேட்டி:
அதில் அவர், தாங்களும் நிர்வாகியாக அங்கம் வகிக்கும் செயற்கை குழுவின் ஒப்புதலினால் தான் நான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். 39 வருடங்களாக நான் நேர்மையாக தொழிற்சங்கவாதியாக இருந்து பல சங்கங்களின் தேர்தல்களை நியாயமாக நடத்திக் கொடுத்திருக்கிறேன். அதே உறுதியுடன் தான் நான் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலையும் நடத்தி சான்றிதழையும் வழங்கி இருக்கிறேன். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு எனக்கு தெரிந்த சில விஷயங்கள் என்னை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறது. என் நேர்மையை சந்தேகப்பட்டு என் மீது தொழிலாளர் நல ஆணையத்தில் உங்கள் அணியை சேர்ந்த சில பேர் தான் புகார் தந்துள்ளார்கள்.
உமாசங்கர் பாபு புகார்:
காசு வாங்கிட்டு தானே வேலை செய்கிறாய் என்றெல்லாம் ஒருமையில் பேசினார்கள். தேர்தலை நடத்தும் அதிகாரிக்கு ரெமுனரேஷன் தருவது எல்லா சங்கங்களிலும் காலம் காலமாக இருந்து வருகிறது. இது ஒரு நடைமுறையான விஷயம் உங்களுக்கு தெரியாதா? என் அறையில் நான் இருந்தபோது என் அனுமதி இல்லாமல் அதாவது எனக்கே தெரியாமல் வீடியோ எடுத்திருக்கிறார்கள். நடிகர் பாலு சந்தர் அதை சங்க மெயிலுக்கு அனுப்பி விட்டு உடனே டெலிட் செய்கிறார். உறுப்பினர் சங்கீதா பாலன் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினார். இது எந்த மாதிரியான நடவடிக்கைகள் என்று புரியவில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி உமாரசங்கர் குற்றம் சாட்டி இருக்கும் உறுப்பினர்கள் எல்லோருமே பரத் அணியை சேர்ந்தவர்கள். இதனால் சின்னத்திரை உறுப்பினர்களிடையே சலசலப்பு தொடங்கி இருக்கிறது.