'விரைவில் சந்திப்போம், வாகை சூடுவோம்'- தவெக முதல் மாநாடு தேதியை அதிரடியாக அறிவித்த தலைவர் விஜய்

By Rajkumar · 20/9/2024

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்னும் தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதோடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி அறிமுகம் செய்திருந்தார். விஜய் தன்னுடைய கட்சி கொடியை ஏற்றுவதற்கு முன் உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி, கொடியை ஏற்றி இருந்தார். அந்தக் கொடியில் வாகை மலரும், இருபக்கம் யானை படமும் இடம்பெற்று இருக்கிறது. பலரும் விஜய்யின் கட்சிக் கொடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

தவெக முதல் மாநாடு:

அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தார். இந்த மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். அதனை அடுத்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள். பின் அந்த கேள்விகளுக்கான பதில் அடங்கிய மனுவை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் வழங்கி இருந்தார்கள். பின் அந்த கேள்விகளுக்கான பதில் அடங்கிய மனுவை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் வழங்கி இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by N Anand (@bussyanandoffl)

மாநாடு அறிக்கை:

தற்போது, 33 நிபந்தனைகளுடன் மாநாட்டை நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் முதல் மாநாடு குறித்து அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்திருக்கிறார். அந்த அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாடு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம்.

மாநாடு எங்கே எப்போது:

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள்‌, கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிறகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி (27.10.2024) மாலை நாலு மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் சந்திப்போம், வாகை சூடுவோம்:

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழி நடத்த போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது‌. தமிழக மக்களின் மனங்களை தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஆயுதப் பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும் பாதையை அமைப்போம். இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாடு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் கேட்கிறேன். விரைவில் சந்திப்போம், வாகை சூடுவோம் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full