கட்சித் தலைவரானதும் வந்த பக்குவமா? போன முறை கலர் சொக்கா, சைக்கிள். இந்த முறை வாக்கு போட எப்படி சென்றுள்ளார் பாருங்க. இதோ வீடியோ.

By Arun · 19/4/2024

தமிழக வெற்றிக் கழக தலைவராக தனது முதல் ஓட்டை போட்டுள்ளார் நடிகர் விஜய். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 7 மணி முதலே வாக்கு பதிவுகள் துவங்கியது.

இதில் மக்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதே போல சினிமா பிரபலங்களும் காலை முதலே தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் காலையிலேயே முதல் ஆளாக சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதே போல நடிகர் ரஜினி, விஜய், விக்ரம் என்று முன்னனி நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து உள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது வாக்கை பதிவு செய்து இருக்கிறார். பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் சென்றார் விஜய். அவரை பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் பின் தொடர்ந்ததால் சாலை முழுதும் போக்குவரத்து நேரில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்ட நேரில் இடையே வாக்கு போடும் அறைக்கு சென்றார் விஜய்.

https://www.youtube.com/shorts/mdaMujYkKOc?feature=share

அங்கே தமிழக வெற்றிக் கழக தலைவராக தனது முதல் ஓட்டை பதிவு செய்தார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் நடிகர் விஜய் ஒரு இளம் பச்சை சட்டை அணிந்து கருப்பு மாஸ்க் அணிந்து தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று இருந்தார். ஆனால், இந்த முறை வெள்ளை சட்டை அணிந்து எந்த வித ஆராவரமும் இல்லாமல் சென்று தனது வாக்கை செலுத்தி இருக்கிறார் விஜய்.

கடந்த பிப்ரவரி மாதம் தான் நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை அறிவித்து இருந்தார். மேலும், 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். 2024

விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தோடு சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full