சாமானியர்களும் அரசியலில் சரித்திரம் படைக்கலாம் - நெகிழ்ச்சியில் தவெக சபரிநாதன் போட்ட பதிவு

முதல்வர் விஜயை புகழ்ந்து சபரிநாதன் போட்ட பதிவு

By subhashini · 16/6/2026

கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா ஹாட் டாபிக்கே சிஎம் விஜய் தான். இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த தேர்தலில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள். பின் தேர்தலின் முடிவில் எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருந்தது. இதை அடுத்து பெரும்பான்மையாக எம் எல் ஏக்கள் பெற்று விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

பதவி ஏற்றவுடன் விஜய் அவர்கள் செம மாஸாக பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். மேலும், விஜய் அவர்கள் பதவி ஏற்ற பின் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்று இருந்தார்கள். ஒவ்வொரு நாளுக்கு முதல்வர் அவர்கள் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து கொண்டு வருகிறார். அதிலும் இவர் துவங்கிய சிங்கப்பெண்ணே அதிரடி படை மாஸாக இருக்கிறது.

விஜய் அரசியல்:

இப்படி இருக்கும் நிலையில் தவெக அமைச்சர் சபரிநாதன் போட்ட பதிவில், சாமானியர்களும் அரசியலில் சரித்திரம் படைக்கலாம் என்று நிரூபித்துக் காட்டியவர் நம் தலைவர், தமிழக முதல்வர் அவர்கள்! ​ஆம், நான் ஒரு சாதாரண கார் ஓட்டுநரின் மகன். இன்னும் சொல்லப்போனால், தலைவரின் கண்பார்வையில் வளர்ந்தவன் நான்; அவர் காட்டிய வழியில் அவரின் கரங்களைப் பற்றி நடந்து தற்போது வரை கற்றுக்கொண்டிருப்பவன் நான்.

சபரிநாதன் பதிவு:

இன்னும் சுருக்கமாக சொன்னால், அவரை மட்டுமே பார்த்து, பார்த்து வளர்ந்தவன் நான். ​சாமானியர்களுக்கு அரசியல் ஏணி என்பது எட்டாக்கனியாக இருந்த காலம் மாறி, பண பலத்தையும், மதம்,சாதி அரசியலையும் உடைத்தெறிந்து, எளிய பின்புலம் கொண்ட அனைவரையும் வெற்றியடைய செய்து ஒரு புது வரலாற்றைப் படைத்துள்ளார் நம் முதல்வர் அவர்கள். ​மற்ற தலைவர்களை போல இல்லாமல், 'சாமானியர்களும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்' என்று மனதார நினைத்து, எனக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்.

மக்கள் ஆசியோடும், தலைவரின் வழிகாட்டுதலோடும் அதில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரும் ஆனேன். அடுத்தபடியாக, நம் முதல்வர் என்னை சட்டமன்ற கொறடாவாக (Whip) நியமித்து மிகப்பெரிய பொறுப்பையும் கொடுத்திருக்கிறார். ஒரு சாதாரண ஓட்டுநரின் மகனை இந்த அளவுக்கு உயர்த்தி பார்த்த என் அன்புத் தலைவருக்கும், தமிழக முதல்வருக்கும் என் ஆயுள் உள்ளவரை நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full