பிக் பாஸ் 9 வீட்டில் தவெக உறுப்பினர்? TVK தொண்டர்கள் ஆதரவு கொடுக்கும் அந்த போட்டியாளர் யார்?

By subhashini · 16/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 10 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். மு
நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவெக உறுப்பினர் ஒருவர் கலந்திருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 9:

அவர் வேறு யாரும் இல்லை சுபிக்ஷா தான். இவர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை அடுத்த பெரியதாழை என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர். கல்லூரி படிப்பை முடித்ததுமே இவர் youtuber ஆகிவிட்டார். இந்தியாவின் முதல் பெண் கடல் விலாகர் என்ற பெருமையை சேர்ந்தவர் சுபிக்ஷா. இவர் மீனவ பொண்ணு சுபி என்ற youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் சுபிக்ஷா, தன்னுடைய தந்தையுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது, கடலிலேயே உணவு சமைத்து சாப்பிடுவது போன்ற வீடியோக்களை போட்டு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

சுபிக்ஷா குறித்த தகவல்:

இவர் youtuber மட்டுமில்லாமல் தன்னுடைய 22 வயதிலேயே பிசினஸ் ஒன்றையும் தொடங்கி அதில் நன்றாக சம்பாதித்தும் வருகிறார். இவர் மீன் ஊறுகாய் பிசினஸ் செய்து வருகிறார். மொத்தம் ஏழு வகையான மீனிலிருந்து ஊறுகாய் போட்டு விற்பனை செய்து வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இப்படி இருக்கும்போது தான் இவருடைய வாழ்க்கையில் அடுத்த கட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் மீனவ பெண் என்ற பெருமையும் சுபிக்ஷாவையே சேரும்.

தவெக ஆதரவு:

எளிய மீனவ குடும்பத்திலிருந்து எந்தவித பின்புலமும் இல்லாமல் கடினமாக உழைத்து தற்போது பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு அளவிற்கு சுபிக்ஷா முன்னேறி இருக்கிறார். இந்த நிலையில் சுபிக்ஷா பிக்பாஸ் வீட்டுக்கு சென்றதில் இருந்தே தவெக சார்பில் ஆதரவு திரட்டி வருகிறது. காரணம், சுபிக்ஷா தவெக உறுப்பினராக இருக்கிறார். அவரை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று விர்சுவல் வாரியர்ஸ் கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகிறார்களாம். இப்படியே போனால் சுபிக்ஷா டைட்டில் வின்னர் ஆகவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full