திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்ளலாமா?எவ்வளவு பணம் வேண்டும்.! பிரசாந்தை சீண்டி மொக்கை வாங்கிய 90ml இயக்குனர்.!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது நேர்மையான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆனால், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கமல் திரைப்படம் இவருடைய மொத்த பெயரையும் அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளது.
https://twitter.com/anitaudeep/status/1102138898015109122
இந்தப் படத்தில் பெண் சுதந்திரம் என்று கூறி பெண்கள் புகை பிடிப்பது, குடிப்பது, கஞ்சா அடிப்பது போன்ற அனைத்தையும் திரையில் காட்டி உள்ளார் இந்த படத்தின் இயக்குனர் அனிதா உதீப்.ஆனால், இயக்குனர் என்ற இடத்தில் இவருடைய பெயரை போடாமல் வேறு ஒருவரின் பெயரை போட்டுள்ளார்.
விமர்சனரீதியாக கழுவி சுற்றிவரும் இந்தப்படத்தை பிரபல சினிமா விமர்சகரான பாண்டா என்று அழைக்கப்படும் பிரசாந்த் இந்த படத்தை படுமோசமாக விமர்சித்திருந்தார், சொல்லப்போனால் உண்மையைத்தான் சொல்லி இருந்தார். பிரசாந்தின் விமர்சனத்திற்கு அனைவரும் வரவேற்பையும் தந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தை மோசமாக விமர்சித்ததற்கு இந்த படத்தின் இயக்குனரான அனிதா உதவிப், பிரசாந்துடன் ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டவர், உங்கள் விமர்சனத்தை நான் மிகவும் எதிர்பார்த்து வந்தேன். ஆனால், நீங்கள் விமர்சனத்திற்கு பதிலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரைகளை கூறி உள்ளீர்கள். எனவே ,நீங்களே சொல்லுங்கள் திருமணத்துக்கு முன்பாக நான் உடலுறவு வைத்துக் கொண்டால் சரியா ?தவறா ?.அதற்கு முன்பாக உங்களுக்கு நான் வெயிட்டான கவரை அனுப்புகிறேன்' என்று டுவிட் செய்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து பிரசாந்த் எனக்கு நீங்கள் பல விமர்சனங்களை விலை கொடுத்து வாங்கி விட்டீர்கள் என்பது தெரியும். ஆனால், அனைத்தையும் உங்களால்வாங்க முடியாது படத்தின் விநியோகிஸ்தர்கள் பெரிய தொகை கொடுத்து இந்த படத்தை வாங்கியுள்ளனர். எனவே, இங்கே நெஞ்சை நிமிர்த்தி பேசுவதற்கு பதிலாக அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று பதில் பதிலளித்தார்.
இதற்கு பதிலளித்த அனிதா, நான் என்னுடைய நிர்வாகிகளிடம் கேட்கிறேன் எப்படி உங்களுக்கு மட்டும் பணம் வராமல் இருந்தது என்று. ஒருவேளை உங்களை அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணாமல் மறந்திருப்பார்கள். நீங்கள் மற்ற விமர்சகர்களின் விமர்சனத்தை கேளுங்கள் அவர்களை உங்கள் அளவிற்கு தரம் தாழ்த்த வேண்டாம்' என்று பதிவிட்டார்.
இதற்கு பதிலடி கொடுத்த பிரசாந்த், நான் எனது மக்களுக்காக ரிலீவ் செய்கிறேன், மற்றவருக்காக நாம் செய்யவில்லை. என்னுடைய விமர்சனத்தின் கீழ் உள்ள கமெண்ட்களை படியுங்கள் ஒருவேளை நாம் தவறாக இருந்தால் என்னை அவர்கள் நிராகரித்திருப்பார்கள் ,இதற்கு முன்னாள் உங்களுக்கு தைரியம் இருந்தால் படத்தின் இயக்குனர் என்ற இடத்தில் உங்களுடைய பெயரை நீங்கள் போட்டிருப்பீர்கள். எனவே, நீங்கள் கொடுப்பதாக சொன்ன அந்த பெரிய தொகையை நீங்களே என்னுடைய டிப்ஸாக வைத்துக் கொள்ளுங்கள் என்று பதில் கொடுத்துள்ளார்.