பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உடன் இணையும் மற்றொரு சீரியல் குழு- மீண்டும் தொடங்கும் மெகா சங்கமம் ட்ரெண்ட்

By ·

விஜய் டிவியில் மீண்டும் இரண்டு சூப்பர் ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம் நடக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனால் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Vijay TV Express (@vijaytvexpresss)

குறிப்பாக, குடும்பம் பாங்கான கதைகள், காதல் கதைகள், காமெடி என்று பல ஜானரில் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி, முத்தழகு, சின்ன மருமகள் போன்ற பல தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் டிவி சீரியல்கள்:

அதுமட்டுமில்லாமல் புதிதாகவும் சில தொடர்களை ஒளிபரப்ப இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் அறிவித்திருக்கும் ஸ்பெஷல் அறிவிப்பு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்களின் மகா சங்கமம் தான் நடைபெற இருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

மெகா சங்கமம்:

ஏற்கனவே இந்த இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் பிறந்த நாள் என்பதால் மகாசங்கமம் வைக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் , விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கின் உச்சத்தில் பாக்கியலட்சுமி தொடர் இருக்கிறது. இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவருடைய கணவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீஷும் நடித்து வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி தொடர்:

இந்த தொடர் பெண்கள் எப்படி எல்லாம் குடும்பத்திற்காக கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. தற்போது சீரியலில் ராமமூர்த்தி இறப்பால் மொத்த குடும்பமே பரிதவித்து வருகிறது. கோபி தன்னுடைய தந்தைக்கு இறுதி சடங்குகள் செய்ய நினைக்கிறார். ஆனால், ஈஸ்வரி தடுத்து பாக்கியாவை செய்ய வைக்கிறார். இறுதியில் ராமமூர்த்தியின் அஸ்தியை கங்கையில் கரைத்து வீட்டிற்கு வந்தார்கள். கோபி தன்னுடைய தந்தையின் அஸ்தியை தனியாக வாங்கி கங்கையில் கரைத்து ராதிகாவிடம் புலம்பி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் திகழ்கிறது. முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாம் பாகம் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கான்செப்டில் சென்று கொண்டிருக்கின்றது. பாண்டியன் தன்னுடைய மூன்று மகன்களையும் கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். அதில் எதிர்பாராத விதமாக தன்னுடைய இரண்டு மகன்கள் காதல் திருமணம் செய்தார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு தன்னுடைய மூத்த மகனுக்கு பாண்டியன் திருமணம் செய்து வைத்தார். மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆனதற்கு பிறகு வீட்டில் நடக்கும் கலாட்டா கலவரங்கள் தான் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது சீரியலில் பாண்டியனின் பிறந்தநாளை கொண்டாட மூன்று மருமகள்களும் திட்டம் போடுகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full