சங்கிகளைப் பார்த்தால் எனக்குப் பரிதாபம மட்டுமே இருக்கு- ஆந்திர கோயிலில் நடந்த சர்ச்சையால் உதயநிதி போட்ட பதிவு
தன்னை விமர்சித்து கேலி செய்தவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்திருக்கும் பதிலடி பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர கோயில் ஒன்றில் தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை கால்மிதியாக போட்டு எல்லோருமே மிதித்து குதித்து இருந்தார்கள். இப்படி இவர்கள் மிதித்ததற்கு காரணம் உதயநிதி சனாதனத்தை பற்றி பேசியதது தான்.
ஏற்கனவே அளித்த ஒரு பேட்டியில் திமுகவின் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும். சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும். அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
சனாதனம்:
சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும், இந்த திமுக இயக்கமும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதற்க்கு நம்முடைய முதல்வர் சமூக வலைதளங்களில் பதில் கொடுத்து பதிவு செய்து இருந்தார்.
உதயநிதி சொன்னது:
தமிழகத்தில் மற்றகூடதாது எதுவும் இல்லை என்று மாற்றி காட்டியவர் தான் முத்தமிழ் என்ற கலைஞர் கருணாநிதி. பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது. கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏற வைத்தது. திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது. ஆனால், ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது. இந்த மாநாடுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். இங்கு பேசிவிட்டு அனைவரும் கலைந்து விடக் கூடாது. இங்கு பேசிய கருத்துகளை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆந்திர கோயிலில் நடந்தது:
அதேபோல் திருப்பதி லட்டு ப்ரச்சனை குறித்தும் உதயநிதி பேசி இருந்தார். இதற்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் இருந்தார்கள். இந்த நிலையில் இது குறித்து ஆந்திர கோயிலில் உதயநிதி அவமதிக்கும் நோக்கில் அவர் புகைப்படத்தை காலில் மிதித்து இருக்கிறார்கள். இந்த வீடியோவை தான் இணையத்தில் வைரல் ஆக்கி இருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக உதயநிதி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது.
என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!
— Udhay (@Udhaystalin) October 9, 2024
கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக… pic.twitter.com/rlLFPHUoJL
உதயநிதி போட்ட பதிவு:
கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன். தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை. அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.
என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம் என்று கூறி இருக்கிறார்.