அப்பா அரசியல்ல கலக்குறார், புள்ள ஸ்போர்ட்ஸ்ல கலக்குறாரு - பெருமை சேர்த்துள்ள உதய்யின் மகன்.

By Rajkumar · 26/8/2021

ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க மிகவும் தடுமாறினார் உதயநிதி ஸ்டாலின். இடையில் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல கண்ணேகலைமானே சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது.

இதையும் பாருங்க : அட்டகத்தில சோபியாவ Mr.Mrs சின்னத்திரைல பாத்திருப்பீங்க - கூட இருக்கும் இவங்க யார் தெரியுமா ?

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கிருத்திகா வேறு யாரும் கிடையாது தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு வணக்கம் சென்னை படத்தை இயக்கி தயாரித்து வந்தவர் தான் கிருத்திகா. கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அந்த தொகுதியில் எண்ணெற்ற நலத்திட்டங்களை செய்து அசத்தி வருகிறார். அவரது மகனோ ஸ்போர்ட்ஸ்ஸில் அசத்தி வருகிறார். உதயநிதியின் மகன், ஒரு கால்பந்து வீரர். நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணிக்குத் தமிழகத்திலிருந்து உதயநிதியின் மகன் தேர்வாகி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full