தங்களை போலவே மகனுக்கும் மதம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்த ரியாஸ் கான் உமா தம்பதி

By subhashini · 10/8/2024

உமா- ரியாஸ் கான் மகனின் திருமணம் குறித்த பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே உமா- ரியாஸ்கான் மகனின் திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உமா- ரியாஸ்கான் செலிப்ரட்டி தம்பதிகளுக்கு சாரிக் ஹாசன் மற்றும் சமந்த் ஹாசன் என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் இவருடைய மூத்த பிள்ளை சாரிக் ஹாசன் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இருந்தார். இருந்தும் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. இவர் பென்சில், டான், ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தற்போதும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் நடிகை உமா- ரியாஸ் கான் மகன் சாரிக் ஹாசனுக்கு அடையாறில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.

திருமணம் குறித்த தகவல்:

இந்த திருமணத்தை எளிமையாக நடத்த உமா- ரியாஸ் கான் தம்பதி முடிவு செய்து இருந்தார்கள். ஆனால், தனது மகன் திருமணம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் இவர்கள் அறிவிக்காமல் இருந்தார்கள். இதை அடுத்து நடிகை உமா ரியாஸ் கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மருமகளை அறிமுக செய்திருந்தார். இவரின் வருங்கால மருமகளின் பெயர் மரியா ஜெனிபர். பின் ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 4:00 மணி அளவில் சாரிக் ஹாசன்- மரியா திருமணம் நடந்து முடிந்து இருந்தது.

சாரிக் திருமணம்:

இது தொடர்பான பிரத்தியோக புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் சாரிக்கின் திருமணம் பற்றிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சாரிக் திருமணம் கிறிஸ்டியன் முறைப்படி தான் நடந்திருக்கிறது. உமா ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவர். ரியாஸ் கான் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர்.

https://www.youtube.com/watch?v=P3FtDxgqOrg

உமா-ரியாஸ்கான் குடும்பம்:

இப்போது இவரின் மகன் கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கிறிஸ்டின் குடும்பத்தில் இணைந்திருக்கிறார். இவர்களுடைய குடும்பத்தில் மூன்று மதமே இணைந்திருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்ற பாலிசியில் இவர்கள் இருப்பதை பார்த்து பலருமே பாராட்டி வருகிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்கிறார் ரியாஸ் கான். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடிக்கிறார்.

ரியாஸ் கான்- உமா குறித்த தகவல்:

இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து இருக்கிறார். தற்போது ரியாஸ் கான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ‘இனியா’ தொடரில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமா ரியாஸ் கான் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவரும் பெரும்பாலும் படங்களில் வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். தற்போது இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவருக்கு எக்கச்சக்கமான ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full