சினிமாவில் 80 90 கலகட்டடத்தில் நடித்த நடிகர் நடிகைகள் சிலர் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய் விடுகிறது. அந்த வகையில் விசு இயக்கி நடித்து இருந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மனைவியாக நடித்திருந்த கமலா காமேஷ் என்ன ஆனார் என்பது பலருக்கும் தெரியாது. மூத்த நடிகையான இவர், 80, 90-களில் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர். 14 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.

அதற்கு முக்கிய காரணமே இவருக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தான் அந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் கொஞ்சம் ஓய்வில் இருந்து வந்தார். அதன் பின்னர் ஒருசில ஆண்டுகளில் குணம் அடைந்தாலும் இவருக்கு சினிமா வாய்ப்பு வரவில்லை. ஆனால், சினிமா வாய்ப்பு மட்டும் வந்தால் உடனடியாக நடிக்க தயார் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஜெயபாரதி இயக்கத்தில் வெளியான குடிசை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கமலா காமேஷ்

Advertisement

அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் மிகவும் சாதுவான அம்மா என்றாலோ பாவமான அம்மா என்றாலும் இயக்குனரின் முதல் நினைவிற்கு வருவது இவராகத்தான் இருக்கும் யதார்த்தமான கிராமத்து அம்மாவாக டல் மேக்கப் போட்டுக்கொண்டு இவர் நடித்த பல படங்களை தற்போதும் மறக்க முடியாது குடிசை படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு வியந்து போன இயக்குனர் விசு இவருடைய நாடகங்களில் நடிக்க சொன்னார்.

Advertisement

தொடர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வந்த இவருக்கு விசு குடும்பம் ஒரு கடம்பம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதனை தொடர்ந்து மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் போன்ற 6 படங்களில் விசு இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். 1996 ஆம் ஆண்டு படப்பிடிப்பின்போது இடுப்பில் அடிபட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் இருப்பினும் தொடர்ந்து நடித்து வந்தார் இறுதியாக இவர் விஷ்வ துளசி என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குவித்துக் கோமதி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருக்கிறார் கமலா காமேஷ் அந்த புகைப்படங்கள் இதோ.

Advertisement

Advertisement