அவன் மறுத்தும் நாங்கள் தான் கட்டாயப்படுத்தினோம் - மனோஜ் பாரதிராஜா பற்றி கண்ணீர் மல்க பெரியப்பா ஜெயராஜ்

By subhashini · 3/4/2025

மனோஜ் பாரதிராஜா இறப்பு பற்றி பாரதிராஜாவின் சகோதரர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் இயக்குனர் இமயம் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு செய்தி தான். சமீபத்தில் தான் இவர் இதய ப்ரச்சனை காரணமாக சிகிச்சை எடுத்திருந்தார். சிகிச்சைக்கு பிறகு இவர் ஓய்வு நிலையில் இருந்தார்.

https://www.youtube.com/watch?v=2oNYfK_X0Fk

பின் திடீரென்று கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டு மனோஜ் உயிரிழந்தார். இவருக்கு 48 வயது தான் ஆகிறது. இவருடைய மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரர் நகரில் தான் பாரதிராஜாவினுடைய வீடு இருக்கிறது. அங்குதான் மனோஜ் பாரதிராஜாவின் இறுதி சடங்குகள் நடைபெற்று இருந்தது. அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பருவமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

மனோஜ் பாரதிராஜா மறைவு:

இந்நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு குறித்து பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் அளித்த பேட்டியில், மனோஜ் இறந்ததாக சொல்லப்படும் அன்று, அவனுடைய அப்பா உடன் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தான். தேனிக்கு சென்று ரெஸ்ட் எடுக்க திட்டமெல்லாம் போட்டிருந்தான். அந்த மாலை மனைவி கொடுத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டான். அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் வேலை செய்தவர்கள் டீ போட்டு கொடுத்தார்கள். அதை குடித்த சில நிமிடத்திலேயே அவருக்கு நெஞ்சுவலி வந்தது.

https://www.youtube.com/watch?v=cWuS1bLH_-o

பாரதிராஜா சகோதரர் பேட்டி:

நெஞ்சை பிடித்துக் கொண்டு துடித்தான். சில வாரங்களுக்கு முன்புதான் இதய அறுவை சிகிச்சை அவனுக்கு செய்யப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்தே அவன் ஆபரேஷன் எல்லாம் வேண்டாம் என்று தான் சொன்னான். நாங்கள் தான் அவனை வற்புறுத்தி இருந்தோம். குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களுக்காக நீ ஆபரேஷன் செய் என்று சொன்னோம். மார்ச் ஏழாம் தேதி ஆபரேஷன் நடந்தது. அவன் உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

மனோஜ் கடைசி நிமிடங்கள்:

எதிர்பாராத விதமாக இப்படி நடந்து விட்டது. மனோஜ் எல்லாரிடமும் ரொம்ப நல்லா பழகுவான். ஏதாவது பிரச்சனை வந்தால் எங்களிடம் சொன்னால் நாங்கள் கஷ்டப்படுவோம் என்று சொல்லாமல் இருப்பான்.
என்னுடைய சகோதரர் பாரதிராஜா தன்னுடைய மகனின் போட்டோவை பார்த்து ரொம்பவே அழுது கொண்டிருக்கிறார். மனோஜ் இறந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ரொம்ப எமோஷனாக பேசி இருக்கிறார்.

மனோஜ் பாரதிராஜா திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் மனோஜ் பாரதிராஜா. இவர் தாஜ்மஹால் படத்தில் தான் நடிகன் ஆகி இருந்தார். இருந்தாலும் இவரால் தன் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். கடந்த ஆண்டு இவர் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் பாரதிராஜாவும் நடித்து இருந்தார். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று இருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full