காவி உடை சர்ச்சை, புகார் அளித்த பாஜக மகளீர் அணி - போலீசே வாயடைத்து போகும் வகையில் விளக்கமளித்த சர்ச்சை நடிகை.

By Rajkumar · 16/1/2023

தமிழ் பிக் பாஸை போல ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலாமானவர் உர்பி ஜாவேத். இவர் பேஷன் என்ற பெயரில் வித்தியாசமான உடை அணிவதில் பிரபலமானவர் என்று சொல்லலாம் சாதாரணமாக கற்கள், உடைந்த கண்ணாடி, கயிறு, செய்தி தாள், பூ இதழ்கள், குப்பை காகிதம் போன்றவற்றின் மூலம் தன்னுடைய உடையை மறைத்துக்கொண்டு புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் ஆபாசமாக உடை அணிகிறார் என்று கடுமையான விமர்சங்கள் சோசியல் மீடியாக்களில் வந்தாலும் தொடர்ந்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் படு ஆபாசமாக உடையணிந்து புகைப்படத்தை இன்னமும் பதிவிட்டுதான் வருகிறார். இந்த நிலையில் உர்பி ஆபாசமாக உடையணிந்து மும்பை தெருக்களில் நடக்கிறார் என்று பாஜக மகிளா மோர்ச்சா தலைவர் சித்ரா வாக் குற்றம் சாட்டியிருந்தார். இவரை கைது செய்ய ஏதாவது வழி இருந்தால் கைது செய்யுங்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தான் கடந்த டிசம்பர் மாதம் உர்பி ஜாவேத்தை போலீசார் கைது செய்த்தனர். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாயில் ஒரு விடோவை பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டிருந்தது வழக்கமான ஆபாச புகைப்படம் என்றாலும் அதனை ஆண்களுடன் கவர்ச்சிகரமாக நடமாட தடை விதித்துள்ள இடத்தில புகைப்படம் எடுத்துதான் சர்ச்சையாகியது. இதனை அடுத்து போலீசுக்கு புக்கார் அளிக்கப்பட்டதால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் காவி உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ எடுத்தும் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து உர்பி ஜாவேத் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜனதா மகளிர் அணியை சேர்ந்த சித்ரா வாக் மும்பை போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் உர்பி ஜாவேத், விசாரணைக்கு ஆஜரான போது 'நான் ஒரு இந்தியன், நான் விரும்பும் ஆடைகளை அணிய எனக்கு முழு உரிமை உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எனக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது.'எனது வேலைக்கு ஏற்ப இந்த ஆடைகளை அணிகிறேன்'.'நான் போட்டோ ஷூட் நடத்தி வருகிறேன்., சில சமயங்களில் வேலை நெருக்கடியில் உடை மாற்ற நேரம் கிடைக்காது. உடை மாற்றிக் கொள்ள நேரமில்லாததால், நான் அப்படியே வெளியே செல்வேன், அப்போதுதான் புகைப்படக் கலைஞர்கள் வெளியே வந்து புகைப்படம் எடுக்கிறார்கள், அவை வைரலாகின்றன.இப்போது வைரலாகி வரும் புகைப்படங்களை எப்படி நிறுத்துவது? என்று போலீசே திகைத்து போன அளவுக்கு பதில் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கு மிகவும் மோசமான ஒரு பிரச்னை வந்துள்ளதாகவும், அதனால்தான் நான் உடைகளை அணிவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய தொடைகளிலும் கைகளிலும் அலர்ஜி வந்துள்ளதாகவும், இந்த பிரச்னை மிகவும் கொடுமையாக இருக்கிறது என்றும், இதற்கும் நான் பருத்தி ஆடை தான் அணிந்திருந்தேன் அதனால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full