சோஷியல் மீடியாவில் வைரலான உருளைக்கிழங்கு செல்ல குட்டி பாடலை பாடியது இந்த சூப்பர் சிங்கர் பிரபலத்தின் மனைவி தானா.

By Siva · 29/8/2023

ஊரே ட்ரெண்டிங்காக சென்று கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு செல்லக்குட்டி பாடலை பாடியவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் உருளைக்கிழங்கு செல்ல குட்டி பாடல் தான் ட்ரெண்டிங்காகி இருக்கிறது. இந்த பாடலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே பாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=6KeNjoV5gEc

மேலும், இந்தப் பாடலை குறிப்பாக பெரியவர்கள் தான் அதிகமாக என்ஜாய் பண்ணி கேட்கிறார்கள். இது குழந்தை பாடல் என்றாலும் சோசியல் மீடியாவில் சினிமா பாடல் அளவிற்கு டிரெண்டிங் ஆகி இருக்கிறது. குறிப்பாக, இந்த பாடல் குறித்து வரும் மீம்ஸ்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பாடலை பாடியவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

உருளைக்கிழங்கு செல்லக்குட்டி பாடல்:

இந்த உருளைக்கிழங்கு செல்லக்குட்டி பாடலை பாடியவர் பெயர் மது சௌந்தர். இவர் பிரபலமான பாடகி ஆவார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்டிங் ஆகி இருக்கும் உருளைக்கிழங்கு செல்லக்குட்டி பாடலை பாடி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், பொதுவாகவே ரைம்ஸ் பாடும்பொழுது குரலை பெரிய அளவில் மாற்ற வேண்டி இருக்கும். அதற்கு நிறைய சிரமப்பட வேண்டி இருக்கும்.

https://www.youtube.com/watch?v=QNYB7Tsb880

மது பதிவு:

இந்த பாடலும் அதே போல் தான். நாம் பட்ட சிரமத்திற்கு கடவுள் என்றாவது ஒருநாள் மிகப்பெரிய பலனை தருவார். எனக்கு இந்த பாடல் மூலம் இப்போது அமைந்திருக்கிறது. ஆனால், இந்த பாடல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் பாடியது. இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த பாடலை பிரபலமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். தற்போது இவரின் வீடியோ வெளியானதை தொடர்ந்து பலரும் யார் இந்த மது என்று கூகுள் முழுவதும் தேட ஆரம்பித்தார்கள்.

View this post on Instagram

A post shared by Mathu Soundar (@mathu_thecrack)

மது-சக்தி காதல்:

இவர் தமிழ் சினிமாவில் சில பாடல்களை பாடி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர் சக்தி அமரனின் மனைவி தான் மது. 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியளராக பங்கு பெற்றிருந்தார் சக்தி. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து இவர் படங்களிலும் பாடி கொண்டு வருகிறார்.

மது-சக்தி குறித்த தகவல்:

மது-சக்தி இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இருவரும் இணைந்து பல பேட்டிகளில் பேசி இருக்கிறார்கள். தற்போது இருவரும் சேர்ந்து படங்களிலும் பாடி சிறந்த பாடகர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும், மதுவை இந்த உருளைக்கிழங்கு செல்ல குட்டி பாடல் தான் பிரபலப்படுத்தி இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full