அமைதியாக வாங்கிக் கொள்ள இது என்ன பென்ஷன் பணமா? - காட்டமாக ஊர்வசி அளித்த பேட்டி
தேசிய விருதுக்குழுவை நடிகர் ஊர்வசி சராமரியாக கேள்வி கேட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 71 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது. இன்று 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசிலக்கப்பட்டு இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட படங்களுக்கு தான் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறந்த நடிகராக ஜவான் படத்திற்காக ஷாருக்கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 35 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஷாருக்கானுக்கு இதுதான் முதல் முறைதேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த படமாக 12th பைல் படம் தேர்வு செய்யப்படுகிறது. சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாகி இருக்கிறார்.
71வது தேசியவிருது:
மேலும், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தின் பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி பிரகாஷ் பெற்றிருக்கிறார். இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்தது வாத்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பார்க்கிங் படம் பிடித்து இருக்கிறது. அதோடு பார்க்கிங் படம் சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. பின் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் எம்.எஸ் பாஸ்கர் பெற்றிருக்கிறார். மொத்தம் மூன்று விருதுகளை பார்க்கிங் படம் பெற்று இருக்கிறது.
ஊர்வசிக்கு விருது:
அதன் பின் சிறந்த துணை நடிகர் பிரிவில் மலையாள நடிகர் விஜயராகவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த துணை நடிகை பிரிவில் ஊர்வசிக்கும் தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஏற்கனவே சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவு என்று இரண்டு விருதுகள் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கேரளா ரசிகர்கள் மற்றும் கேரள அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேசிய திரைப்பட விருது குழுவை சராமரியாக கேள்வி கேட்டு நடிகை ஊர்வசி
பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.
ஊர்வசி பேட்டி:
அந்த பேட்டியில் ஊர்வசி, என்னை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நன்றி. ஆனால், எந்த அடிப்படையில் அல்லது எந்த அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்த துணை நடிகைக்கான விருது எனக்கு கிடைத்தது? விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது? விஜயராகவன் துணை நடிகர், சாருக்கான் சிறந்த நடிகர் என்பதால் இந்த நடிப்பை அவர்கள் எவ்வாறு மதிப்பீட்டார்கள்? எந்த அடிப்படையில் ஒப்பிட்டு மதிப்பிடப்பட்டது. விஜயராகவனை சிறந்த துணை நடிகராகவும் ஷாருக்கான சிறந்த நடிகராகவும் ஆக்கியது எது? சிறந்த நடிகர்கள் இருவர், சிறந்த துணை நடிகர்கள் இருவர், ஆனால், சிறந்த நடிகை ஒருவர், சிறந்த துணை நடிகை ஒருவராக தேர்வு செய்திருக்கிறார்கள். ஏன் நடிகைகளுக்கான விருது பகிர்ந்த அளிக்கப்படவில்லை.
https://www.youtube.com/watch?v=KiiuJj9ewb0
ஊர்வசியின் சராமாரி கேள்வி:
மேலும், பிரித்விராஜ் நடித்த ஆடு ஜிவிதம் படத்திற்கு ஏன் ஒரு பாராட்டு கூட கிடைக்கவில்லை. அதேபோல் தமிழில் நான் நடித்த ஜே பேபி படத்தை அவர்கள் பார்த்தார்களா என்று கூட தெரியவில்லை. நாங்களும் வரி செலுத்துகிறோம். மற்றவர்களைப் போல நாங்களுமே எங்கள் வேலைகளை செய்கிறோம். நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விருது தேர்வு குழு பதிலளிக்க வேண்டும். கிடைப்பதை வாங்கி வைத்துக் கொண்டு அமைதியாக இருப்பதற்கு இது ஒன்றும் ஓய்வு ஊதியம் கிடையாது. இது எங்கள் வேலைக்கான அங்கீகாரம். மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தலையிட்டு இது தொடர்பாக கேள்வி கேட்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.