என்னது ஒரு நிமிடத்திற்கு இத்தனை கோடி சம்பளமா ? - லெஜண்ட் பட நடிகை பேச்சால் ஆடிப்போன ரசிகர்கள்.

By Arun · 31/8/2023

ஒரு நிமிடத்திற்கு நடிகை ஊர்வசி ரவுதெலா ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதெலா. இவர் பூர்விகம் கோட்வார். இவர் தன்னுடைய 15 வயதில் வில்ஸ் லைஃப்ஸ்டைல் ​​இந்தியா ஃபேஷன் வீக்கில் முதல் பெரிய இளவரசி பட்டதை பெற்றார். பின் இவர் மிஸ் டீன் இந்தியா 2009 என்ற பட்டத்தையும் வென்றார்.

அதனை தொடர்ந்து இவர் இந்திய இளவரசி 2011, மிஸ் டூரிசம் வேர்ல்ட் 2011, மற்றும் மிஸ் ஏசியன் சூப்பர்மாடல் 2011 ஆகியவற்றை வென்றார். அதன் பின் தான் இவர் சன்னி தியோலுக்கு ஜோடியாக சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு தென்ந்திய படங்களில் பணியாற்றத் தொடங்கினார். மேலும், இவர் கன்னடத்தில் கூட சில படங்களில் படத்தில் நடித்தார். இருந்தாலும், இவர் பாலிவுட் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி இருந்தார்.

மேலும், இவர் தமிழில் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் வெளிவந்திருந்த தி லெஜன்ட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் மொழியில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்திற்கு இவருக்கு சில கோடி சம்பளம் கொடுத்திருந்தார்கள். இதனை தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இந்தி போன்ற பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஊர்வசி ரவுதெலா பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

அதில் அவரிடம் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக நீங்கள் இருக்கிறீர்கள். ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக எப்படி உயர்ந்தீர்கள்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஊர்வசி ரவுதெலா, இது நல்ல விஷயம் தான். ஒவ்வொரு நடிகர் நடிகையும் இப்படிப்பட்ட ஒரு நாளுக்காக தான் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். இதற்காக எல்லோருமே ஆசைப்படுவார்கள் என்று கூறினார்.

இப்படி ஊர்வசி ரவுதெலா பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலருமே ஊர்வசி ரவுதெலாவை விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதில் சிலர், ஓரு நிமிடத்திற்கு 1 கோடினா அப்போ ஒரு மணி நேரத்தில் 60 கோடி சம்பாதிக்கிறார். இது எப்படி சாத்தியம்? பொய் சொல்றதுக்கு அளவில்லையா? வாய்க்கு வந்த நம்பர் எல்லாம் அடித்து விடுவதா? என்றெல்லாம் விமர்சித்து பதிவு போட்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஊர்வசி ரவுதெலா தெலுங்கு படம் ஒன்றில் மூன்று நிமிடம் வரும் பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருந்ததாக செய்தி வந்தது. இதை வைத்து தான் இப்படி சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை உருவாக்கினார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் ஏற்கனவே மும்பையில் 190 கோடிக்கு பிரம்மாண்ட சொகுசு பங்களாவை வாங்கி இருக்கிறார். இப்படி இவர் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி வாங்கினால் எல்லாமே தான் வாங்குவார் என்று கூறி வருகிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full