மனைவி முதல் இரண்டு குழந்தை வரை குடும்பத்தில் யாருக்கும் பார்வை இல்லை - அண்ணாத்த பட பாடகரின் பரிதாப நிலை.

By Rajkumar · 16/9/2022

அண்ணாத்தே திரைப்படத்தில இமான் இசையமைப்பில் பாடகர் முகேஷ். திருமூர்த்தி ஆகியோருடன் இணைந்து உச்சாயிஸ்தான குரலில் வீச்சருவா என வா சாமி பாடலில் இணைந்து பாடியிருப்பார் பாடகர் சம்ப்சுதீன். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சம்சுதீன் சமீபத்தில் புஹாரி ஜங்சன் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி குடுத்தபோது, சம்சுதீன் மட்டுமல்லாது அவரது மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் பார்வைத்திறன் இல்லை என்கிற செய்தி வீடியோ பார்த்தவர்களை மனம் கணக்க வைத்துள்ளது.

https://www.youtube.com/watch?v=rOlL8YmGbE0&feature=youtu.be

சம்சுதீன் , மேடை கச்சேரிகளில் பாடி வந்தபோது, கொரானா காலகட்டத்தில எந்த வித வாய்ப்பும் இல்லாததாம் வீட்டிலேயே முடங்கி இருந்திருக்கிறார்,அந்த சூழலில் கர்ணன் திரைப்படத்தில் வெளிவந்த கண்டா வரச்சொல்லுங்க பாடலை பெண் குரலிலில் மாற்றிப்பாடவும் அந்த பாடலை கேட்ட இசையமைப்பாளர் இமான் அவர்கள் அண்ணாத்தே திரைப்படத்தில் பாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே ரேடியோ மட்டுமே கேட்டு இசை ஞானத்தை வளர்த்த சம்சுதீனுக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஆகும். தற்போது மனைவி குழந்தைகளுடன் மதுரையில் வசித்து வருவதாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்,

குடும்பம்

சம்சுதீன் பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே, அங்க உடன் படித்த மாணவியை காதலித்து கரம்பிடித்து உள்ளார். சம்சுதீனின் மனைவிக்கு முழுப்பார்வை கிடையாது,சம்சுதீனுக்கும் அவரது மனைவிக்குமான காதலில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு பார்வை கிடையாது. அவரது இரண்டாவது குழந்தைக்கான சிகிச்சைக்காக இமான் அவர்களே செலவு செய்து ஆபரேஷனுக்கு உதவிய போதிலும் பார்வை எப்போது கிடைக்கு என உறுதி செய்யப்படாமல் இருக்கிம்ன்றனர்.

https://www.youtube.com/watch?v=IaTeQoZbU1k

கஷ்டம்

இவ்வளவு கஷ்டமான சூழலிலும் , தன் குழந்தைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டுமென்கிர வைராக்கியத்தோடு வாழ்ந்து வருகிறார் சம்சுதீன். பொருளாதார சிக்கல்களுடன் பார்வையற்ற தன் மனைவியின் துணையோடு மகள் மற்றும் மகன்களை எப்படியாவது அவர்கள் விருப்பப்படி படிக்க வைத்துவிட வேண்டுமென நம்பிக்கையோடு காத்திருக்கிறார் சம்சுதீன், இவரின் இந்த பேட்டி தற்போது பலரை கலங்க வைத்து இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full