கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பட்டைய கிளப்பியதா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

By subhashini · 14/1/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்தி.
தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் வா வாத்தியார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ராஜ்கிரண், எம்ஜிஆர் உடைய தீவிர ரசிகர். இவர் எம்ஜிஆர் படம் பார்க்கும்போது எம்ஜிஆர் இறந்துவிட்ட செய்தி வருகிறது. இதனால் ராஜ்கிரன் ரொம்பவே அழுது கொண்டிருக்கிறார். அப்போது ராஜ்கிரனுக்கு பேரன் பிறந்திருக்கிற செய்தியும் வருகிறது. அவர் தான் கார்த்தி. எம்ஜிஆர் இறந்த அதே நேரத்தில் தன்னுடைய பேரன் பிறந்ததால் கார்த்தியை அடுத்த எம்ஜிஆர் என்று நினைத்து தன்னுடைய பேரனை நேர்மையாக வளர்க்க நினைக்கிறார் ராஜ்கிரன்.

முதலில் கார்த்தியும் எம்ஜிஆர் மாதிரி வளர்கிறார். ஒரு கட்டத்தில் நம்பியாரை இன்ஸ்பயர் ஆகி தவறான வேலைகள் எல்லாம் செய்து போலீஸ் ஆகிறார் கார்த்தி. இன்னொரு பக்கம் மஞ்சள் முகம் என்ற ஹேக்கர் கும்பல் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக இருக்கிறார்கள். கார்த்தி அவர்களை பிடிக்கும் முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் கார்த்தி ஓட உண்மை முகமும் ராஜ்கிரனுக்கு தெரிய வருகிறது. அதற்கு பிறகு என்ன ஆனது? கார்த்தி, எம்ஜிஆர் ஆனாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.

படத்தில் ஹீரோ கார்த்தி எந்த ரோலாக இருந்தாலும் அதில் மாசாக கலக்குவது அவருடைய ஸ்பெஷல். இவர் நம்பியார் இன்ஸ்பிரேஷன் பெயரில் செய்த சேட்டைகள் எல்லாம் சூப்பராக இருக்கிறது. அதற்கு பிறகு இவர் எம்ஜிஆராக மாறும் காட்சிகளும் தூளாக இருக்கிறது. சண்டை காட்சிகள் எல்லாம் கார்த்தி சிக்ஸர் அடித்திருக்கிறார். படத்தினுடைய முதல் பாதி கார்த்தி செய்யும் கோல்மால் வேலைகள் தான். பின் எம்ஜிஆர் ஆக மாறி கார்த்தி கலக்கும் காட்சிகள் எல்லாம் அற்புதமாக இருக்கிறது.

இவரை அடுத்து படத்தில் வரும் ராஜ்கிரன் தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். இவரை அடுத்து கதாநாயகி வரும் கீர்த்தி செட்டிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அவர் தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை சரவெடியாக இருக்கிறது. இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் சில காட்சிகள் சலிப்படைய வைத்தாலும் இறுதி காட்சி நன்றாக இருக்கிறது. டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு டார்க் காமெடி படமாக வா வாத்தியார் படம் அமைந்திருக்கிறது.

நிறை:

கார்த்தியின் நடிப்பு

இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது

டெக்னிக்கல் விஷயங்கள் ஓகே

காமெடிகள் நன்றாக இருக்கிறது

குறை:

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம்

மொத்தத்தில் வா வாத்தியார் - டார்க் காமெடி

Tamil Behind Talkies AMP · Quick view
View full