தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் இட ஒதுக்கீடு குறித்து கூறியுள்ள கருத்து தற்போது சர்ச்சையாக மாறி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் வந்த அனைத்து படங்களுமே பெரிய அளவில் ஹிட் கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் “வாத்தி”.

இப்படத்தில் வெங்கி அட்லூரி இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகை சம்யுக்தா தனுஷுக்கு ஜோடியாக நடிக்க, மொட்டை ராஜேந்திரன், சமுத்திரக்கனி, கென் கருணாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொறியியல் மருத்துவம் போன்ற கல்விகள் வியாபாரமாக்கும் நோக்கத்தில் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை மூடினர். இதனை எதிர்த்து மக்கள் போராடும் போது அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதாக வருகிறார் சமுத்திரக்கனி.

Advertisement

ஆசிரியராக தனுஷ் :

ஆனால் அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம் மற்றும் முற்றம் தர ஆசிரியர்களை வைத்து கல்வி கொடுக்க நினைக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க பெற்றோர் ஆதரவு மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு இல்லாத அரசு பள்ளியில் தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்று வருபவர் தான் நடிகர் தனுஷ் . இவர் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கையை கல்வி மூலம் எப்படி மாற்றுகிறார் என்பது தான் மீதி கதையாக இருக்கிறது. இந்த நிலையில் வாத்தி திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் இயக்குனர் வெங்கி கூறியுள்ள கருத்து தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

வாத்தி இயக்குனர் :

நடிகர் மற்றும் இயக்குனமான வெங்கி அட்லூரி கடந்த 2010 ஆம் ஆண்டு சினேகா கீதம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் வசனம் எழுதி நடிக்கவும் செய்திருந்தார். அதற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் ” தோழி ப்ரேமா” என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்த வெங்கி அதற்கு பிறகு மிஸ்டர் மஞ்சு, ரங்கே போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷை வைத்து தமிழ் சினிமாவில் “வாத்தி” படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்.

Advertisement

இயக்குனரின் வெங்கி பேட்டி :

இந்த நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியான “வாத்தி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இப்படத்தின் இயக்குனர் வெங்கி கூறியுள்ள கருத்து தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. சமீபத்தில் “வாத்தி” படத்தின் இயக்குனர் வெங்கி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் பத்திரிக்கையாளர் ஒருவர் “நீங்கள் ஒருவேளை அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளார்.

Advertisement

சர்ச்சை கருத்து :

அதற்கு பதிலளித்துள்ள இயக்குனர் வெங்கி “நான் மட்டும் மத்தியகல்வி அமைச்சராக இருந்தால் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நீக்கி விடுவேன். ஓதுக்கீடு என்பது ஜாதி அடிப்படையில் இருக்கக் கூடாது பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கூறினார். இது பெரிய சர்ச்சையாக சோசியல் மீடியாவில் வெடித்து இணையவாசிகள் பலரும் வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கியின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

Advertisement