தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட வருடங்களுக்கு பின் அருவி பட இயக்குனர் ருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் ‘வாழ்’ திரைப்படம் சமீபத்தில் சோனி OTT தளத்தில் வெளியாகியுள்ளது. அருவி படத்தில் நடித்த பிரதீப் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. நாளை என்பது நாளைக்கு, உங்கள் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு புதிய மனிதத்ர்களும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவர்கள் என்ற ஒரு மையக்கருத்தை வைத்து இந்த படம் ஒரு ட்ராவலர் மற்றும் எக்ஸ்ளோரர் படமாக அமைந்து உள்ளது.

இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள பிரதீப்பின் எதார்த்தமான நடிப்பை ஏற்கனவே ‘அருவி’ படத்தில் பார்த்திருக்கிறோம். இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆனால், பிரதீப்பை தவிர இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாயகி இருவரும் ரசிகர்களுக்கு புது முகம் தான்.

இதையும் பாருங்க : ரக்ஷன் அணிந்த ட்ரெஸ்ஸை தனுக்கு வேண்டும் என்று கமன்ட் செய்த ஷிவாங்கி – அப்படி என்ன ட்ரெஸ்னு பாருங்க.

Advertisement

அதிலும் இந்த படத்தில் யாத்ரா அம்மாவாக நடித்துள்ள நடிகை தன்னுடைய வசீகரமான நடிப்பால் பலரின் மனதை கொள்ளைகொண்டுள்ளார். இவரது உண்மையான பெயர் TJ பானு. மாடல் அழகியான இவர் 2014 ஆம் மிஸ் இந்தியா அழகி போட்டியில் பைனலிஸ்ட்டில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேரு விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் கூட நடித்து இருக்கிறார்.

மேலும், இவர் அமேசான் பிரைமில் வெளியான ‘Forgotten Army’ என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமானது ‘வாழ்’ திரைப்படத்தின் மூலம் தான். இந்த படத்தில் இவரது நடிப்பு பலரால் பாரட்டப்பட்டு வருகிறது. மேலும், இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அருவி பட நடிகை மாதிரி இவரும் அட்ரஸ் இல்லாமல் போகாமல் இருந்தால் சரி.

Advertisement
Advertisement