தள்ளுவண்டி கடை TO பிக் பாஸ் போட்டியாளர் - ஒரே நாளைக்கே இவ்வளவு வருமானமா? வடா பாவ் பெண்ணின் கதை

By subhashini · 25/6/2024

சமூக வலைத்தளத்தின் மூலம் பிரபலமாகி பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட பெண்மணி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்குப் பிறகு தான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி டிவி மட்டும் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே ஒடிடியில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் இந்தியில் முதல் இரண்டு பிக் பாஸ் ஓடிடி சீசன்களை சல்மான்கான் தான் தொகுத்து வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த ஆண்டில் ஒளிபரப்பாகும் மூன்றாவது சீசனுக்கான நிகழ்ச்சியை அணில் கபூர் தொகுத்து வழங்குகிறார். அந்த வகையில் கடந்த 21-ஆம் தேதி தான் இந்த நிகழ்ச்சி கோலாகலத்துடன் தொடங்கப்பட்டது.

சந்திரிகா தீக்சித் கடை:

இந்த நிகழ்ச்சியில் சமூக வலைத்தளம் மூலம் பிரபலமான 'சந்திரிகா தீக்சித்' என்பவர் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இவர் டெல்லியில் வடா பாவ் தள்ளுவண்டி கடை ஒன்று வைத்திருக்கிறார். இவர் பட்டதாரி பெண் தான் இருந்தாலும் தன்னுடைய வேலையை விட்டு வடா பாவ் பிசினஸில் இறங்கி இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் டெல்லியில் இந்த வடா பாவ் கடையை வைத்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Rajat Upadhyay (@foodbowlss)

சந்திரிகா தீக்சித் குறித்த தகவல்:

மேலும், யூடியூபர் ஒருவர் மூலம் இவர் ஒரே நாளில் சோசியல் மீடியாவில் பிரபலமானார். இதனை அடுத்து இவருடைய கடைக்கும் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் தெருவோரத்தில் இவர் கடையை வைத்து நடத்துவதில் நிறைய பிரச்சனைகள் வந்ததால் அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டி இருந்தார்கள். இதுவும் சோசியல் மீடியாவில் பேசும் பொருள் ஆகியிருந்தது. அதற்குப் பிறகுதான் சந்திரிகா தீக்சித் இந்தியா முழுவதும் பிரபலமானார். இப்படி இருக்கும்போது தான் இவருக்கு பிக் பாஸ் ஓடிடி மூன்றாவது சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சந்திரிகா தீக்சித் பதிவு:

மேலும் இது தொடர்பாக நிகழ்ச்சியில் முதல் நாள் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சந்திரிகா தீக்சித், இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இதை நான் சரியாக பயன்படுத்திக் கொள்வேன். என்னுடைய குடும்ப சூழ்நிலையையும், குழந்தையினுடைய எதிர்காலத்தையும் மனதில் வைத்து இதன் மூலம் கிடைக்கும் பணத்தை அவர்களுக்கு உதவுவேன். இதற்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய ஒரு நாள் சம்பளம் குறித்து பேசி இருப்பது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்திரிகா தீக்சித் சம்பளம்:

அதாவது, இவர் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் இடம், நான் என்னுடைய தள்ளுவண்டி கடை மூலம் ஒரு நாளைக்கு 40,000 சம்பாதிக்கிறேன். இதற்காக நான் நிறைய கஷ்டப்பட்டு உழைத்தேன். அதனால் தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். நீங்களும் இன்ஸ்டாகிராம், சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணாக்குவதை விட்டு இறங்கி கஷ்டப்பட்டு உழைத்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்று புரிந்தார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலருமே சந்திரிகா தீக்சித் உழைப்பை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full