அந்த ஹாஸ்பிடல்ல இத்தனை லட்சம் செலவு பண்ணோம் ஒன்னும் இல்லனு சொல்லி அனுப்பிச்சாங்க - வடிவேலு பாலாஜி தாயார் பேட்டி.

By Rajkumar · 10/9/2020

விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

https://www.instagram.com/p/CE9R6d7FaSs/?igshid=1t9v1be31tn9t

இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.

கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி பணம் கட்ட முடியாததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.

இப்படி ஒரு நிலையில் வடிவேல் பாலாஜி தாயார் அளித்த பேட்டியில், முதலில் நாங்கள் எம் ஜி ஆம் மருத்துவமனைக்கு சென்றோம், பின்னர் விஜய ஹாஸ்பிடலில் 10 நாட்கள் இருந்தோம் 10 லட்சம் செலவு செய்து அவருக்கு சிகிச்சை அளித்தோம். நான் பணம் இல்லை என்று நான் வரவில்லை,. ஆனால், அவருக்கு அங்கேய சிகிச்சை முடிந்து அவருக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள். அங்கே அவரை சரியாக பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் வடிவேல் பாலாஜியின் தாயார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full