வடிவேலு மற்றும் ஷங்கரின் 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்திற்கான பஞ்சாயத்து நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். மிழில் சிம்புதேவன் இயக்கி 2006 ல் வெளிவந்த படம் 23 ஆம் புலிகேசி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.இந்நிலையில் மீண்டும் வடிவேலுவை வைத்து 24 ஆம் புலிகேசியை இயக்கவிருந்தது.23 ஆம் புலிகேசியை தயாரித்த ஷங்கர் தான் இந்த படத்தினையும் தயாரிக்க இருந்தார்.

இந்த நிலையில் வடிவேலு இப்படத்தில் தான் நடிக்கமாட்டேன் என கூறி உள்ளார்.இதற்க்கு காரணம் படத்தில் பெரிய நடிகர்களின் பட்டாளம் இருக்க கூடாது என்றும் படத்தில் தனது ஆடை வடிவமைப்பாளர் தான் இருக்கவேண்டும் என்றும் பல வாக்குவதங்களை செய்துள்ளார்.

Advertisement

இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. படத்தை முடித்து தரும்படியும் இல்லையேல் வடிவேலுவால் ஏற்பட்ட 9 கோடி ருபாய் நஷ்டத் தொகை தரும்படியும் பட குழுவினர் புகார் அளித்துள்ளனர். ஆனால், பணத்தை திரும்ப தர மறுத்ததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் வடிவேலுவால் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்திற்கு சிக்கல் ஏற்பட்டதாக சங்கர் கருதுகிறாராம். ‘இந்தியன் 2’படத்தில் தன்னிடம் மிகக் கெடுபிடியாக நடந்துகொண்டதற்குக் காரணமே தனது நிறுவனத்தின் மூலம் லைகாவுக்கு தயாரித்துத்தருவதாக ச்சொன்ன ‘24ம் புலிகேசி பணம் மொத்தமாக முடங்கியதுதான் என்று ஷங்கர் உறுதியாக நம்புகிறார்.. இதனால் வடிவேலு மீது கடுமையான கோபத்தில் இருக்கிறாராம் சங்கர்.

Advertisement

Advertisement
Advertisement