9 கோடி நஷ்டம்.! அடம் பிடிக்கும் வடிவேலுக்கு நடிக்க தடை.! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி.!

By Ajju · 14/9/2018
நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள்.காமெடியில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் இந்த இம்சை அரசனுக்கு மேலும் ஒரு இம்சை வந்துள்ளது. தமிழில் சிம்புதேவன் இயக்கி 2006 ல் வெளிவந்த படம் 23 ஆம் புலிகேசி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.இந்நிலையில் மீண்டும் வடிவேலுவை வைத்து 24 ஆம் புலிகேசியை இயக்கவிருந்தது.23 ஆம் புலிகேசியை தயாரித்த ஷங்கர் தான் இந்த படத்தினையும் தயாரிக்க இருந்தார். இந்த நிலையில் வடிவேலு இப்படத்தில் தான் நடிக்கமாட்டேன் என கூறி உள்ளார்.இதற்க்கு காரணம் படத்தில் பெரிய நடிகர்களின் பட்டாளம் இருக்க கூடாது என்றும் படத்தில் தனது ஆடை வடிவமைப்பாளர் தான் இருக்கவேண்டும் என்றும் பல வாக்குவதங்களை செய்துள்ளார். இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. படத்தை முடித்து தரும்படியும் இல்லையேல் வடிவேலுவால் ஏற்பட்ட 9 கோடி ருபாய் நஷ்டத் தொகை தரும்படியும் பட குழுவினர் புகார் அளித்துள்ளனர். ஆனால், பணத்தை திரும்ப தர மறுத்ததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
behindtalkies AMP · Quick view
View full