நீங்க சொல்லி தான் எனக்கே தெரியும் - மனோபாலாவின் இறப்பு குறித்து உருக்கமாக பேசிய வடிவேலு

By Rajkumar · 3/5/2023

மனோபாலாவின் இறப்பு குறித்து வடிவேலு பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ்சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள் அந்தவகையில் நடிகர் மனோபாலா ஒருவர். ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா. மேலும், இவரை சிபாரிசு செய்தது வேறு யாரும் இல்லை நம் உலகநாயகன் கமலஹாசன் தான்.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார் .அதன் பின்னர் பல்வேறு படங்களை இயக்கினார் மணவாளா இறுதியாக ஜெயராம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நைனா படத்தை இயக்கியிருந்தார். மேலும், சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை ,சதுரங்க வேட்டை 2 போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் மனோபாலா. இப்படி ஒரு நிலையில் இன்று மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானர்.

இந்த நிலையில் மனோ பாலாவின் இறப்பு குறித்து பேசி இருக்கும் வடிவேலு 'மனோபாலா பெரிய இயக்குநர், கிரியட்டர், சிந்தனையாளர். அவர் காலமானது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நீங்கள் சொல்லி தான் எனக்கே தெரியும். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர் மிகவும் சிறந்த ஒரு குணச்சித்திர நடிகர். எல்லா நடிகர்களுடன் நடிக்கும் போது அவர் மேற்கொண்டு சில கருத்துகளை சொல்லி நடிப்பவர்.

https://www.youtube.com/watch?v=FutLf34GMCI&t=18s

நல்ல மனிதர். வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து தருவார். யாருக்காவது எதாவதது ஒன்று என்றால் உடனே சென்று நிற்பவர். அவரின் குடும்பத்தினருக்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஐயோ.. என்னால் முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கு. இதுக்கு மேல நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பேசியுள்ளார்.

நடிகர் வடிவேலுவிற்கும் மனோபாலாவிற்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. நடிகர் வடிவேலு 24 ஆம் புலிகேசி பிரச்சனையில் சிக்கி தமிழ் சினிமாவில் நடிக்க தடை பெற்று இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் நடிகர் மனோபாலா நடத்தி வந்த யூடுப் சேனல் ஒன்றில் நடிகர் சிங்கமுத்து பங்கேற்று பேசி இருந்தார். அந்த வீடியோவை நடிகர் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் மனோ பாலா பகிர்ந்து இருந்தார்.

https://www.youtube.com/watch?v=Qj6Szp9ZJGI&t=52s

மேலும், அந்த வீடியோவில் தன்னை பற்றி பல தவறான செய்திகளை கூறியுள்ளதாக வடிவேலு குற்றம் சாட்டியுள்ளார். இந்த விடீயோவினால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது என்றும், ஏற்கனவே சிங்க முத்துவிற்கும் தனக்கு ஒரு வழக்கு நீதி மன்றத்தில் போய்க்கொண்டு இருக்கிறது என்றும் கூறிய வடிவேலு தன்னை பற்றி தரை குறைவாக பேசிய சிங்கமுத்து மீதும் மனோ பாலா மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு வடிவேலு அளித்த புகாரில் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full