பகத் பாசில்-வடிவேலு கம்போ கைக்கொடுத்தா? இல்லையா? 'மாரீசன்' படம் எப்படி இருக்கு - முழு விமர்சனம் இதோ
மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பிறகு பகத் பாசில், வடிவேலு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் மாரீசன். இந்த படத்தை சுதீஷ் சங்கர் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்., தேனப்பன் லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் பகத் பாஸில் சின்சீனியரான திருடனாக இருக்கிறார். இவர் ஒரு திருட்டு கேசில் ஜெயிலுக்கு சென்று விடுதலை ஆகி வருகிறார். இவர் ஒரு வீட்டில் மீண்டும் திருடப் போகிறார். அந்த வீட்டில் வடிவேலு இருக்கிறார். வடிவேலுக்கு நியாபகம் மறதி இருப்பதால் அவருடைய மகன் கட்டிப்போட்டு வைத்திருக்கிறான். இதனால் வடிவேலு, பகத் பாஸிடம் தன்னை காப்பாற்றினால் 25,000 ரூபாய் பணம் தருகிறேன் என்று சொல்கிறார். ஆனால், வடிவேலுவிடம் 25 லட்சம் பணம் இருப்பதை பகத் பாசில் தெரிந்து கொண்டு உதவி செய்ய
ஒத்துக்கொள்கிறார்.
அதோட அந்த பணத்தையும் கொள்ளையடிக்க பகத் திட்டம் போடுகிறார். பின் பைக்கிலேயே பகத் பாஸில், வடிவேலு இருவருமே நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு போகிறார்கள். அதற்கு பிறகு தான் பல டீவ்ட்ஸ்ட் வருகிறது. உண்மையிலேயே வடிவேலுக்கு ஞாபகம் மறதி வியாதி இருக்கிறதா? வடிவேலு ஏன் திருவண்ணாமலைக்கு போகிறார்? வடிவேலுமிடமிருந்து பகத் பாசில் பணத்தை கொள்ளை அடித்தாரா? என்பதுதான் மீதி படத்தின் கதை.
மாமன்னன் படத்திற்கு வடிவேலு- பகத் பாசில் இருவருமே சேர்ந்து நடித்திருப்பது நன்றாக இருக்கிறது.
மாமன்னன் படத்தில் இருவரும் எதிரெதிரே இருந்தாலும் இந்த படத்தில் இருவரும் ஒன்றாக பழகி சந்தோசமாக பயணிக்கிறார்கள். அதோடு இந்த படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது என்று சொல்லலாம். படம் முழுக்க நகைச்சுவையை திணிக்காமல் இயல்பாகவே இயக்குனர் காண்பித்து இருக்கிறார். பகத் பாஸில் திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்து இருக்கிறார்.
வடிவேல் உடைய நடிப்புமே மிரட்டலாக இருக்கிறது. படத்தினுடைய முதல் பாதி நன்றாக சென்றிருக்கிறது. இடைவெளிக்கு பின்வரும் ட்விஸ்ட் தான். கதையவே மாற்றி இருக்கிறது. வடிவேலு எதற்காக பகத்திடம் உதவி கேட்கிறார், அவருக்கு இருக்கும் பிரச்சனை என்ன என்பதை இயக்குனர் அழகாக காண்பித்து இருக்கிறார்.
ஆனால், அதை நாமே யூகிக்கக்கூடிய அளவிற்கு காண்பித்திருப்பது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.
இரண்டாம் பாதி சுவாரசியமாக இல்லாமல் பொறுமையாக நகர்கிறது.
https://www.youtube.com/watch?v=7sDC9CBH-Zg
குறிப்பாக, கிளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும் காண்பித்திருக்கலாம். டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. யுவனின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. அதோடு படத்தின் வசனங்கள் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் தியேட்டருக்கு ஒருமுறை சென்று பார்க்கும் படமாக தான் மாரீசான் இருக்கிறது.
நிறை:
பகத் பாசில், வடிவேலு நடிப்பு
முதல் பாதி நன்றாக இருக்கிறது
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
படத்தில் வசனங்கள் நன்றாக இருக்கிறது.
குறை:
இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக காண்பித்திருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில இடங்களில் முக்கியமான காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
மொத்தத்தில் மாரீசன் படம் - அழகான பயணம் அழுத்தம் குறைவு