தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பின் இடையில் சில பிரச்சனைகளால் சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். நடிகர் ராஜ்கிரனால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு என்று பலரும் அறிந்த ஒன்று.

நடிகர் வடிவேலு அவர்களை சினிமா துறையில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் நடிகர் ராஜ்கிரன் தான் என்று பல இடங்களில் சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றோம். பலமுறை நடிகர் ராஜ்கிரன் அவர்களே வடிவேலுவை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று கூறி உள்ளார். பிறகு வடிவேலும் ராஜ்கிரன் தான் அறிமுகப்படுத்தியாக பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

Advertisement

இந்நிலையில் தற்போது வடிவேலு அவர்கள் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. வடிவேலு அவர்கள் முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த என் தங்கை கல்யாணி என்ற படத்தில் தான் நடித்திருக்கிறார். இந்த படத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.இதற்குப் பிறகு தான் நடிகர் வடிவேலு அவர்கள் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் தான் வடிவேலு அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். இந்த படத்தில் தான் வடிவேலுவின் பெயர் டைட்டில் கார்ட்டில் வந்தது. எனவே, இந்த படம் தான் வடிவேலுவின் முறையான முதல் சினிமா அறிமுகம் என்றும் கருதப்படுகிறது.இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஆரம்பத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை தான் முதலில் கொடுத்திருந்தார் ராஜ் கிரண்.

Advertisement

ஆனால், இவரது திறமை பிடித்துப்போக இவருடைய நடிப்பு திறனை பார்த்து இவரையே ஒரு பாடலையும் பாட வைத்து இருப்பார் ராஜ்கிரண். போடா போடா புண்ணாக்கு என்ற பாடல் மூலம் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும் பாடகராகவும் புகழ் பெற்றார் வடிவேலு. இந்தப் படத்தில் தான் வடிவேலு அறிமுகம் என்று டைட்டில் போடப்பட்டிருந்தது. ஆனால், இவர் டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான என் தங்கை கல்யாணி படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்கள் அனைவரும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Advertisement

தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. அதற்கு பிறகு 1992 ஆம் ஆண்டு ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் சின்ன கவுண்டர் என்ற படத்தின் மூலம் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின்னர் பிரபு, கார்த்திக், கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று பல நடிகர்களின் படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார்.

வைகைப்புயல் வடிவேலுவின் காமெடிக்கள் இன்றளவும் பலரும் ரசிக்கும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. வடிவேலு கடந்த சில காலமாக திரைப்படத்தில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் இவரது திரைப்படத்தில் டெம்ப்லட்டுகள் தான் மீம் கிரியேட்டர்களுக்கு் ஒரு பூஸ்ட் என்றும் கூறலாம். வடிவேலு இல்லாத மீம் மற்றும் வீடியோ வேர்சன் இல்லாத மீம் பக்கங்களே கிடையாது. அந்த அளவிற்கு தலைவரின் காமெடி வசனங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை ஆட்சி செய்து வருகிறது.

Advertisement