நாய் சேகர் ரிலீஸ் நெருங்கும் வேலையில் Meme கிரியேட்டர்களை சந்தித்து வடிவேலு செய்த செயல்.

By Rajkumar · 4/12/2022

மீம்ஸ் கிரியேட்டர்களை நடிகர் வடிவேலு சந்தித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு.

வடிவேலு திரைப்பயணம்:

இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் தற்போது வடிவேலு அவர்கள் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் படம்:

இந்த படத்திற்கு முதலில் நாய் சேகர் என்ற டைட்டில் தான் இருந்தது. ஆனால், அதே டைட்டிலில் சதீஷ் கதாநாயகனாக நடித்த படம் வெளியாகி இருந்தது. இதனால் வடிவேல் உடைய படம் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆக மாறியது. இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். லைகா புரோடக்சன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்து இருக்கிறார். மேலும், இவர்களுடன் படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

படத்தின் டிரைலர்:

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. பல ஆண்டுகள் கழித்து வடிவேலு நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் தான் வடிவேலு பாடிய இரண்டு பாடல்களுமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மீம் கிரியேட்டர்களை சந்தித்த வடிவேலு:

மேலும், சில தினங்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களில் தீவிரமாக பட குழு ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய படத்தின் ப்ரமோஷனுக்காக வடிவேல் அவர்கள் மீம் கிரியேட்டர்களையும் மற்றும் ரசிகர்களையும் சந்தித்திருக்கிறார். அப்போது ரசிகர்கள் வடிவேலுக்கு மரியாதை செலுத்தி அவருடன் உரையாடி இருக்கிறார்கள். தற்போது அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல வருடங்களாக சினிமாவில் இருந்து வடிவேலு விலகி இருந்தாலும் அவரை மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாக்கியது மீம் கிரியேட்டர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full