மிக்ஸாம் புயல் நிதி - உதயநிதியை நேரில் சந்தித்து வடிவேலு கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

By subhashini · 15/12/2023

மிக்ஸாம் புயல் தொடர்பாக உதயநிதி சந்தித்து வைகைப்புயல் கொடுத்திருக்கும் நிவாரணத் தொகை தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரமாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் அதிகமாக வைரலாகி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள்.  

சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் கூட இந்த புயலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த மழையில் டூவீலர், ஃபோர் வீலர் என எல்லா வண்டிகளுமே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருந்தது. அந்த வீடியோ எல்லாம் மக்கள் மத்தியில் பதபதப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மழை பொழிவு நின்றாலும் தண்ணீர் முழுமையாக வடியவில்லை. தண்ணீர் வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு செல்ல பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

மிக்ஜாம் புயல்:

மேலும், பிரபலங்கள் பலருமே தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இவர்களுடன் சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் நடிகை ரக்ஷிதா, கலா மாஸ்டர், அறந்தாங்கி நிஷா, கேபிஒய் பாலா போன்ற பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள். இந்த புயலால் தண்ணீர், உணவு, மின்சாரம் எதுவும் இல்லாமல் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். படகுமூலம் தான் மக்களுக்கு உணவுகளையும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

மீட்பு பணிகள்:

தற்போது அரசாங்கம் சீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை இன்னும் சில தினங்களில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவி தொகைகளை அரசிடம் நேரடியாக ஒப்படைத்து வருகிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூரி அவர்கள் மதுரையில் உள்ள தன்னுடைய உணவகத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் நேரில் சந்தித்து கொடுத்திருக்கிறார்.

வைகைப்புயல் வடிவேலு நிதி உதவி:

இந்த நிலையில் வைகைப்புயல் வடிவேலு கொடுத்திருக்கும் நிவாரணத் தொகை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் வடிவேலு அவர்கள் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து 6 லட்சம் ரூபாய் காசோலையாக கொடுத்திருக்கிறார். இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு, மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

உதயநிதி பதிவு:

இந்த சூழலில் அரசின் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவிடும் வகையில் "முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு" திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் 6 லட்சத்திற்கான காசோலையை இன்று வழங்கினார் அவருடைய அன்பிற்கு நன்றி என்று கூறி இருக்கிறார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் வெளியாகியிருந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full