தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இவர் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு.

Advertisement

வடிவேலு திரைப்பயணம்:

இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து இருந்தார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் :

இந்த படத்திற்கு முதலில் நாய் சேகர் என்ற டைட்டில் தான் இருந்தது. ஆனால், அதே டைட்டிலில் சதீஷ் கதாநாயகனாக நடித்த படம் வெளியாகி இருந்தது. இதனால் வடிவேல் உடைய படம் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆக மாறியது. இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். லைகா புரோடக்சன் இந்த படத்தைதயாரித்து இருந்தது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்துஇருந்தார்.

Advertisement

வடிவேலு தாயார் :

மேலும், இவர்களுடன் படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவி இருந்தது. இப்படி ரீ – என்ட்ரி கொடுத்த படம் தோல்வியடைந்ததை நினைத்து சோகத்தில் இருந்த வடிவேலுவிற்கு தற்போது அடுத்த சோகமாக அவரது தாயார் காலமாகி இருக்கிறார். வடிவேலுவுடன் மொத்தம் பிறந்தவர்கள் 7 பேர்.

Advertisement

இதில் வடிவேலுவை தவிர வேறு யாரும் நல்ல நிலையில் இல்லை. மேலும், வடிவேலுவின் தாயார் மதுரையில் உள்ள வீரகனூர் என்ற கிராமத்தில் தான் வசித்து வந்தார். சென்னையில் இருக்கும் வடிவேலு மதுரை செல்லும் போது தனது தாயாரை சந்தித்து வருவார். வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 87. இவரது மரணம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement