நான் தான் ஒரிஜினல் - சதீசுக்கு போட்டியாக 'நாய் சேகர்' பட போஸ்டரை வெளியிட்ட வடிவேலு.

By Rajkumar · 8/10/2021

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக காமெடி நடிகராக வலம் வருபவர் வைகை புயல் வடிவேலு. இவர் எண்ணற்ற படங்களில் நகைச்சுவை நடிகராகவும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து உள்ளார். அந்த வகையில் இவர் சங்கர் இயக்கத்தில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். ஆனால், வடிவேலுவுக்கும், சங்கருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக படம் நிறுத்தப்பட்டதது. இதனால் நடிகர் வடிவேல் மீது ரெட் கார்டு போடப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தயாரிப்பார் சங்கருக்கு லைக்கா நிறுவனம் 5 கோடி கொடுத்து வடிவேலுவை தன் பக்கம் இழுத்து உள்ளார்கள்.

மேலும், வடிவேலு மீது போடப்பட்ட ரெட் கார்டு நீங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வடிவேலு அவர்கள் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தன்னுடைய அடுத்த படத்தை லைக்கா நிறுவனத்துக்காக நடிக்க போகிறேன் என்றும் இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார் என்றும் இந்த படத்திற்கு நாய் சேகர் என்று தலைப்பு வைப்பதாகவும் கூறியிருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் வடிவேலு நடிக்கவிருக்கும் நாய் சேகர் படத்தின் டைட்டலில் சில பிரச்சனை ஏற்பட்டது. வடிவேலுவுக்கு முன்பாகவே அவசர அவசரமா 'நாய் சேகர்' டைட்டிலை வெளியிட்டார் காமெடிய நடிகர் சதிஷ். இதுகுறித்து பேசிய அவர், இந்த படத்தில் ஒரு நாயும் முக்கிய ரோலில் நடிக்கிறது அதனால்தான் இந்த குறிப்பிட்ட தலைப்பை வைத்தோம் இந்த படத்தின் சூட்டிங் எடுப்பதற்கு முன்பாக தெரிந்திருந்தால் கண்டிப்பாக இந்த டைட்டிலை கொடுத்திருப்போம்

ஆனால், வடிவேலுவோ நாய் சேகர் தலைப்பு தனக்கு தான் என்று கூறி இருந்தார். இருப்பினும் நாய் சேகர் என்ற டைட்டிலை வேறு விதத்தில் வைக்கலாம் என்று படக் குழு திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் வடிவேலு படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் 'நாய் சேகர் Returns' என்று டைட்டிலை வைத்ததோடு போஸ்டரில் 'ஒரிஜினல்' என்றும் குறிப்பிட்டு வடிவேலு தான் ஒரிஜினல் நாய் சேகர் என்பதை ரிஜிஸ்டர் செய்து உள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full