என்னுடைய விவாகரத்துக்கு காரணம் இது தான் - வேதனையில் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி சொன்னது

By subhashini · 6/4/2025

பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி விவாகரத்து பெற்ற காரணம் குறித்து அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான பாடகியாக திகழ்ந்தவர் வைக்கம் விஜயலக்ஷ்மி. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் பாடகி மட்டுமில்லாமல் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இவர் 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான செல்லுலாய்டு என்ற படத்தின் மூலம் தான் பாடகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் மலையாளம், தமிழ் என பல மொழிகளில் தன்னுடைய இசை திறமையை காண்பித்து வருகிறார். இவர் தமிழில் குக்கூ படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து புதிய உலகை, காக்கா முட்டை, பிறவி என் ஜீவன், வாயாடி பெத்த புள்ள போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்திருக்கிறார்.

வைக்கம் விஜயலக்ஷ்மி குறித்த தகவல்:

மேலும் கடந்த ஆண்டு சென்சேஷனலாக மலையாளத்தில் வெளிவந்த அங்கு கோணிலோ என்ற பாடலையும் இவர் தான் பாடியிருந்தார். அந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது. தற்போது இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பின்னணி பாடகியாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

வைக்கம் விஜயலக்ஷ்மி குடும்ப வாழ்க்கை:

இதற்கிடையில் இவர் என். அனூப் என்ற மிமிக்ரி கலைஞர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு தான் இவர்களுடைய திருமணம் ஸ்ரீ மகாதேவா கோவிலில் நடைபெற்று இருந்தது. பின் 2021 ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். சினிமாவில் இவர் உச்சத்தில் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய துயரங்களை சந்தித்து இருக்கிறார்.

வைக்கம் விஜயலக்ஷ்மி பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் வைக்கம் விஜயலக்ஷ்மி, நான் விவாகரத்து செய்ததற்கு காரணம், இசையில் இது பண்ணக்கூடாது அது பண்ணக்கூடாது என்று என்னுடைய கணவர் என்னை ரொம்பவே டிஸ்கரேஜ் பண்ணிக் கொண்டிருந்தார். என்னுடைய அப்பா, அம்மாவை எல்லாம் பார்க்க கூடாது, பேசக்கூடாது என்று சொன்னார். நான் இசையில் கொஞ்சம் ஃபேமஸ் ஆனது அவருக்கு பிடிக்கவே இல்லை.

https://www.youtube.com/watch?v=G2W9OgqIXBM&t=39s

விவாகரத்து பெற்ற காரணம்:

அவருக்கு கொஞ்சம் ஈகோ இருந்தது. அது நாளுக்கு நாள் அதிகமானது. கல்யாணம் ஆகி ஒரே மாதத்திலேயே என்னை ரொம்பவே டிஸ்கரேஜ் பண்ண ஆரம்பித்து விட்டார். நான் சாமி ரூமுக்கு போனால் கூட அவருக்கு பிடிக்காது. தேவையில்லாத விஷயத்திற்கு எல்லாம் கோபப்படுவார். அதனால் எனக்கு நிம்மதியே இல்லாமல் போச்சு. ஒரு கட்டத்தில் ரொம்பவே காயப்படுத்த ஆரம்பித்துவிட்டார். அதனால்தான் நான் விவாகரத்து செய்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full