அஜித் பிறந்தநாளுக்கு 'வலிமை' பர்ஸ்ட் லுக் வராது, அதுக்கு இதான் காரணம் - ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்கிய போனி.

By Rajkumar · 23/4/2021

நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

https://twitter.com/BoneyKapoor/status/1385602964958580736

அவ்வளவு ஏன் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அந்த வீடியோவும் வைரலானது.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தக்க நேரத்தில் வலிமை அப்டேட் வரும் என்று கூறினார் அஜித்.

இதையும் பாருங்க : பேராசையால் உதவி செய்ய பின் வாங்கியுள்ள அஜித் - செல்பிஷ் பெண்ணை எச்சரித்து அனுப்பியுள்ள போலீஸ்.

இப்படி ஒரு நிலையில் மே 1 ஆம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்த நிலையில். அறிவித்தபடி அஜித் பிறந்தநாளுக்கு 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் வராது என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமான செய்தியை கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

https://twitter.com/SivanesanThala/status/1385603153941258246

இதுகுறித்து போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கொரோனா நோயின் இரண்டாம் அலை வரும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்தஇத்தகைய அசாதரண சூள்நிலையில் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின் படி 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா எப்போ போறது பர்ஸ்ட் லுக் எப்ப வாராது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full