தமிழ் சினிமால திரும்பவும் அந்த அஜித் படத்தின் பாட்டப் போல ஒரு பாட்டு வரவே முடியாது - வைரமுத்து
அஜித்தின் பாட்டை குறித்து நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியின் கலையரங்கில், திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. 'இன்முகத் தலைவரை பாடும் இசைபடு கவியரங்கம்' என்னும் தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில், கருணாநிதியை புகழ்ந்து கவிஞர்கள் வைரமுத்து, பா.விஜய், கபிலன் மற்றும் விவேகா ஆகியோர் கவிதை எழுதி கொடுக்க, இசையமைப்பாளர் பரத்வாஜ் தலைமையிலான இசைக் குழுவினர் மேடையிலேயே பாடலை உருவாக்கி அசத்தினர். இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து அவர்கள் கூறியது, இந்திய சினிமாவில் அதிக வரிகளை கொண்ட பாடல் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன். இந்தப் பாடலை செஞ்சிக்கோட்டையில் அஜித் பாடியிருந்தார்.
அஜித் பாடல் குறித்து சொன்னது:
சரண் இந்த பாடலை இயக்கினார். நான் இந்த பாடலுக்கு வரிகளை எழுதிக் கொடுத்தேன். எஸ்பிபி இந்த பாடலை பாடியிருந்தார். 89 வரிகளைக் கொண்டது இந்த பாடல். இந்த மாதிரி அதிக வரிகளை கொண்ட பாடல் இந்திய சினிமாவில் கிடையாது. அதே போல் எஸ் பி பி ஐ தவிர வேறு யாராலும் இந்த பாட்டை பாடவே முடியாது. நான் சோசியல் மீடியாவில் புரட்டிக் கொண்டிருக்கும்போது எஸ்பிபியின் சிறந்த பாடல்களில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் முதல் இடத்தை பிடித்திருந்தது என்று கூறியிருந்தார்.
தமிழ் சினிமாவில் திரும்பவும் இந்த "அஜித் படத்தின்" பாட்டைப் போல ஒரு பாட்டு வரவே முடியாது - வைரமுத்து 👌#AjithKumar #VidaaMuyarchi #Vairamuthu pic.twitter.com/p4AvnLtF0Z
— ♨️ மாவட்டம் ♨️ (@AJITH__AFC) June 5, 2023
அஜித் திரைப்பயணம்:
கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.
அஜித் நடித்த படங்கள்:
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. ஆனால், இந்த இரண்டு படமும் தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கிறார்.
விடாமுயற்சி படம்:
இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.