என் கவிஞர் கர்வம் எல்லாம் கழுவி முடிந்தது, ஏன்னா - பாடலாசியர் வைரமுத்துவின் எமோஷனல் போஸ்ட்
தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. ‘நிழல்கள்’ என்னும் திரைப்படத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார்.
இதுவரை வைரமுத்து அவர்கள் 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
அதிலும், இவரின் பல பாடல்களுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளையும் வைரமுத்து வாங்கி இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய துறையிலுமே ஆளுமை படைத்தவராக விளங்குகிறார். அதுமட்டுமில்லாமல் கவிஞர் வைரமுத்துவின் பல பாடல்கள். தமிழ்நாடு பாடநூல் மட்டுமல்லாமல் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கூட பாடங்களாக இடம்பெறும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.
வைரமுத்து குறித்த தகவல்:
சிங்கப்பூர் அரசின் கல்வி திட்டத்தில் கவிஞர் வைரமுத்துவின் ‘மரங்களைப் பாடுவேன்’ என்ற கவிதை தமிழ் பாடமாகவே இடம்பெற்றிருக்கிறது. இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார்.
வைரமுத்து சர்ச்சை:
இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர். இந்த விவகாரத்தில் இருந்து வைரமுத்துவிற்கு பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் குறைந்து விட்டது. இருந்தாலுமே இவர் தன் மனதில் தோன்றும் கவிதைகளை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் சோத்துப்பாறை அணைக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஒரு கவிதை எழுதி சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார்.
சோத்துப்பாறை போயிருந்தேன்
— வைரமுத்து (@Vairamuthu) November 26, 2025
நீர்த்தேக்கத்தின்
நீரோசை கேட்டேன்
அந்த ஓசை என்னை
என்னென்னவோ செய்தது
கவிஞன் என்ற கர்வத்தைக்
கழுவி முடித்தது
மூளைக்குள் ஒட்டியிருந்த
ஒட்டடைகளை ஒற்றி எடுத்தது
என்னைப் பாதி மரணத்திற்குப்
பழக்கப் படுத்தியது
அதன் கரையில்
ஆலமரத்தடியில் அமர்ந்துவிட்டேன்… pic.twitter.com/LLdLmSypvc
வைரமுத்து கவிதை:
அதில் அவர்,
சோத்துப்பாறை போயிருந்தேன்
நீர்த்தேக்கத்தின்
நீரோசை கேட்டேன்
அந்த ஓசை என்னை
என்னென்னவோ செய்தது
கவிஞன் என்ற கர்வத்தைக்
கழுவி முடித்தது
மூளைக்குள் ஒட்டியிருந்த
ஒட்டடைகளை ஒற்றி எடுத்தது
என்னைப் பாதி மரணத்திற்குப்
பழக்கப் படுத்தியது
அதன் கரையில்
ஆலமரத்தடியில் அமர்ந்துவிட்டேன்
ஒரு மனிதன்
விழித்திருக்கும் நேரமெல்லாம்
தன்னையே நினைத்துக்
கொண்டிருத்தல் தவறு;
நித்தம் ஒருபொழுதேனும்
நினைவொழிய வேண்டும்
காலியாகாத பாத்திரத்தில்
புதியதை நிரப்ப முடியாது
தன்னை மறந்து
தன் நாமம் கெட்டுக்
காலம் கடந்து
கருத்தழிய வேண்டும்
அந்த ஓசை அப்படியோர்
உபாசனை செய்தது
அதுவொரு மன மருத்துவம்
அதை எதிர்பார்த்துச் செல்லவில்லை
ஆனால் அது நேர்ந்தது
அதுவொரு
சின்ன மரணத்தின் ஒத்திகை;
சுண்டுவிரல் மட்டும்
சொர்க்கத்தில் நுழைந்துவந்த அனுபவம்
எதில் வேண்டுமானாலும்
இது நேரலாம்
சிறு தூறலின் சிணுங்கலில்,
வானவில் துண்டில்,
கடக்கும் மேகங்களின்
உருவ மாற்றத்தில்,
இருளின் ஆழ்கடலில்,
முதல் வெளிச்சத்தின்
முணுமுணுப்பில்,
உதிரும் சருகில்,
அதிரும் பூமியில்
இது நேரலாம்
எனக்கு
நீரோசையில் நேர்ந்தது
நேற்று கொஞ்ச நேரம்
இறந்து பிறந்தேன்
இன்று எனக்கு
வயது ஒருநாள் என்று கூறி இருக்கிறார்.